பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34


தங்கள் இனங்கள் பல இடங்களில் நிலை கொள்ளவும், போதிய உணவு, ஒளி, காற்று முதலியவற்றைப் பெற்று வாழ்க்கைப் போராட்டத்தைத் தவிர்க்கவும் இவை பரவுகின்றன.

28. கனிஉறை என்றால் என்ன?

கனியின் சுவர் இது. இது மூவகை.

1. புறவுறை 2. நடுவுறை 3. உள்ளுறை

29. மாம்பழத்தில் உண்ணும் பகுதி எது?

நடுவுறையான சதைப்பகுதி.

30. பூசுனை வகைக்கனி என்றால் என்ன?

கீழ்ச்சூல்பையிலிருந்து உண்டாவது. பறங்கி, கக்கரி.

31. பொய்ககனி என்றால்என்ன?

முந்திரிப் பழத்தின் சதைப் பகுதியும் ஆப்பிளின் சதைப்பகுதியும் பொய்கனி எனப்படும். உண்மைக்கனி முந்திரிக் கொட்டையும் ஆப்பிள் விதையுமாகும்.

32. மெய்க்கனி என்றால் என்ன?

சதைப்பகுதி விதையோடு சேர்ந்துள்ள பழம். எ டு மா.

33. கொடிமுந்திரி, ஆப்பிள் ஆகிய கனிகளில் காணப்படும் காடி யாது?

மாலிகக்காடி


34. இதன் சிறப்பென்ன?

கிரப் சுழற்சியின் ஒர் இன்றியமையாப் பகுதி.


35. தற்கனி என்றால் என்ன?

தற்கருவுறுவதால் உண்டாகும் கனி.


36. திரள்கனி என்றால் என்ன?

பல தனிச்சூலகங்களைக் கொண்ட ஒரு தனிப் பூவிலிருந்து உண்டாவது. மனோரஞ்சிதம், அன்னாசி.


37. மயிர்க்குஞ்சம் என்றால் என்ன?

இது உருவில் மாற்றமடைந்த புல்லிவட்டம். நேர்த்தியான மயிரிழைகள் விதைக்கு மேல் வளர்ந்து குதிகுடைபோல் இருக்கும். காற்றினால் பரவும் விதைகளில் இவ்வமைப்பு காணப்படும். எ-டு எருக்கு.


38. புற வளர்ச்சி (அலா) என்றால் என்ன?