பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


கனிமேல் காணப்படும் படலப்புற வளர்ச்சி. தட்டையான சிறகமைப்பு. இது கனி காற்றில் பறக்க உதவுகிறது. வேம்பாடம்.

39. கூர்ச்சிகள் என்றால் என்ன?

கோதுமை, புல் முதலிய தாவரங்களின் பூ உமிகளைச் சுற்றியுள்ள வளர்ச்சிகள்.

40. விதை என்றால் என்ன?

கருவுற்ற சூலே விதை. இது ஒரு விதை இலைத் தாவரங்கள் மற்றும் இருவிதையுடைய தாவரங்களுக்கு மட்டுமே உள்ளது.

41. விதையிலுள்ள மூன்று பகுதிகள் யாவை?

விதையுறை, விதையிலை, முளைக்கரு.

42. விதையிலுள்ள ஒவ்வொரு பகுதியின் வேலை யாது?

1. விதையுறை - பாதுகாப்பு.

2. விதையிலைகள்- முளைக்கும் கருவிற்கு உணவளிக்கின்றன.

3. முனைவேர் - வேராகிறது.

4. முளைக்குருத்து - தண்டாகிறது.

43. விதைப்பண்ணைத் திட்டம் என்றால் என்ன?

வேளாண்மையில் விளைச்சளைப் பெருக்க மிக அடிப்படையானவை மூன்று.

1. மண் 2. உரம் 3. தகுதியுள்ள விதை.

1996 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விதைச்சட்டப்படி இது செயற்படுகிறது. இத்திட்டத்தில் விதைப்பண்னை, அடிப்படை விதைப்பண்ணை, துறை விதை நிலையம் ஆகிய மூன்றும் அமைந்து உழவர்களுக்குத் தகுதியான விதைகளை அளித்து வருகின்றன.

8. இனப்பெருக்கம்

1. இனப்பெருக்கம் என்றால் என்ன?

ஆண் அணு பெண் அணுவுடன் சேர்வதால் கருவணு உண்டாகி உயிர்தோன்றுதல். எல்லா உயிர்களுக்கும்