பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37


10. இரட்டைக் கலப்பினம் என்றால் என்ன?

வேற்றுநிலையில் நடைபெறும் சேர்க்கை. எ-டு. மஞ்சள் நிற வட்டமான தோட்டப் பட்டாணிக்கும் சுருங்கிய பச்சைப் பட்டாணிக்குமிடையே மஞ்சள் நிறப்பட்டாணியை உண்டாக்க நடைபெறும் மெண்டல் கலப்பு.

11. உள்ளினக் கலப்பினமாக்கல் என்றால் என்ன?

ஒரு மரபணுவிலிருந்து மற்றொரு மரபணுவிற்குக் கலப்பினமாக்கல் மூலம் பொருளைச் செலுத்திப் பின் பெற்றோர் கலப்பு செய்தல். இது பயிர்க்கலப்புத்திட்டம், கால்நடைப் பண்ணை ஆகியவற்றின் அடிப்படை.

12. உட்பெருக்கம் என்றால் என்ன?

1. நெருங்கிய உறவுள்ள இரு தனி உயிர்கள் உண்டாக்கும் இளம் உயிர்கள். 2. பாலணுக்கள் இணைவின் வாயிலாகக் கால்வழி உண்டாதல்.

13. புணர்ச்சி அல்லது இணைவு என்றால் என்ன?

இரு உயிரணுக்கள் தற்காலிகமாக இணையும் செயல். எ-டு. ஸ்பைரோகைரா.

14. இரட்டைப்பிளவு என்றால் என்ன?

ஒர் உயிரியின் பாலில்லா இனப்பெருக்கம். இதில் ஒத்த ஆனால் சிறிய சேய்உயிர்கள் உண்டாதல். எ-டு. குச்சி வடிவ உயிரிகள்.

15. கன்னிப் பெருக்கத்தைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?

ஜெர்மன் - அமெரிக்க உடலியல். ஜேக்குயிஸ் லோப் என்பார் 1899இல் கண்டறிந்தார்.

16. இருநிலைக் கன்னிப்பிறப்பு என்றால் என்ன?

ஆணும் பெண்ணும் கன்னிமுறையில் இனப்பெருக்கம் செய்தல்.

17. இருநிலைக் கலப்பு என்றால் என்ன?

பாலணுக்கள் சேர்வதால் ஏற்படும் உண்மைக்கலப்பு.

18. வேற்றுக்கலப்பு என்றால் என்ன?

அயற்கலப்பு. அளவு வேறுபாடுள்ள இரு பாலணுக்கள் சேர்தல். அதாவது, முட்டை பெரியதாகவும் விந்து சிறியதாகவும் இருத்தல்.