பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


தாவரத்தின்மீது ஒட்டப்படுகிறது. எ-டு. ஆப்பிள், கிச்சிலி.

27. வெட்டிநடுதல் என்றால் என்ன?

போத்து நடுதலான விதையிலா இனப்பெருக்கம் சார்ந்தது. எ-டு கிளுவை, பூவரசு.

28. உறுப்பு வளர்ப்பு என்றால் என்ன?

நறுக்கப்பட்ட கருக்கள், இலைகள், வளர்திசு, வேர் ஆகியவற்றைத் தகுந்த கரைசலில் வளர்த்தல்.

29. துண்டாதல் என்றால் என்ன?

கீழ்நிலையிலுள்ள பல கண்ணறை கொண்ட உயிர்களில் காணப்பெறும் கலவியிலா இனப்பெருக்கம். பல பகுதிகளாக உடல் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் புதிய உயிராதல், எ-டு. தாவரம் - ஸ்பைரோகைரா. விலங்கு - மலேரியா ஒட்டுண்ணி.

30. கருமுட்டை (ஒவம்) என்றால் என்ன?

பெண் பாலணு. தாய் முட்டையிலிருந்து குன்றல் பிரிவு மூலம் உண்டாவது.

31. இரட்டைக் கருவுறுதல் என்றால் என்ன?

இது சில இரு விதையிலைத் தாவரங்களில் நடை பெறுவது. மகரந்தக்குழல் உட்கருக்களில் ஒன்று முட்டையுடனும் மற்றொன்று முனை உட்கருவோடும் சேர்வதால் முறையே கருவணுவும் மும்மய உட்சூழ் தசையும் உண்டாகும்.

32. அல்பாலணுக் கலப்பு என்றால் என்ன?

தாவரத்தில் பாலணு சேராமல் விதை உண்டாதல்.

33. அல்துளைக்கலப்பு என்றால் என்ன?

சூல்துளை அல்லாது வேறுவழியில் மகரந்தக்குழல் சூலுக்குள் செல்லுதல்.

34. மீப்பெருக்கம் என்றால் என்ன?

உயிரணு அளவு அதிகமாதல். உடல் அல்லது உடல் பகுதி இயல்பு மீறி வளர்தல்.