பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


18. இதன் சிறப்பென்ன?

பாய்ம மூலக்கூறுத் துகள்களின் தொடரும் தாக்குதலால் இவ்வியக்கம் நடைபெறுவது. கூழ்மச் சிதறுதொகுதிகளைப் பொறுத்தவரை இது அடிப்படைச் சிறப்பு வாய்ந்தது.

19. நீராவிப் போக்கு என்றால் என்ன?

தாவரங்கள் தங்கள் இலைகளிலுள்ள துளைகள் வழியாக வேண்டாத நீரை வெளித்தள்ளல்.

20. நீராவிப்போக்கின் நன்மைகள் யாவை?

1.தாவரத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலையைக் குறைக்கிறது.

2. உறிஞ்சும் விசையாக அமைந்து அதிக நீர் மரஉச்சிக்குச் செல்ல உதவுகிறது.

3. அதிக அளவு நீரை உறிஞ்சித் தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய நீரைப் பெறுகின்றன.

4. உயிரணுச் சாற்றைச் செறிவடையச் செய்து ஊடுபரவுதலுக்கு உதவுகிறது.

21. கடத்தல் என்றால் என்ன?

தாவர ஊட்டப்பொருள்கள் அதன் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லுதல். இதை நொதிச் செயல் ஊக்குவிக்கிறது.

22. விதை முளைத்தல் என்றால் என்ன?

தகுந்த சூழ்நிலைகளில் விதையிலுள்ள குழந்தைச்செடி முளைத்து வெளிவருதல்.

23. இதன் வகைகள் யாவை?

1. தரைமேல் விதை முளைத்தல் - அவரை.

2. தரைகீழ் விதை முளைத்தல் - நெல்.

24. விதையுறக்கம் என்றால் என்ன?

பாதுகாக்கப்பட்ட விதையின் முளைக்கரு நீருடன் தொடர்பு கொள்ளும் வரை செயலற்றிருக்கும் நிலை. இந்நிலை சூல் விதையாக மாறியதிலிருந்து விதை ஊன்றப்படும் வரை இருக்கும்.

25. வளர்ச்சி என்றால் என்ன?

இயற்பியல் உடலியல் செயல்களினால் உயிரணு உடலின்