பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43


எடையிலும் அளவிலும் ஏற்படும் பெருக்கம். மீள்மாறு நிலை இல்லாதது.

26. பொதுவாக வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணிகள் யாவை?

1. வைட்டமின்கள். 2. ஆர்மோன்கள் - வளர்தூண்டிகள். 3. ஆக்சின்கள் - தாவரத்தூண்டிகள்.

27. வளர்ச்சி எதிர்ப்பி என்றால் என்ன?

தாவரங்களில் வளர்ச்சியைத் தடுக்கும் பொருள்.

28. தூயவளர்ப்பு என்றால் என்ன?

இதில் ஒரு நுண்ணுயிரியின் ஒரு சிறப்பினம் மட்டும் இருக்கும்.

29. வளர்ப்பிகள் என்றால் என்ன?

தாவர வளர்துண்டிகள் - உயிரியல் வினையூக்கிகள்.

30. இவற்றின் ஆராய்ச்சி வரலாறு யாது?

ஒட்ஸ் நாற்றுகளில் இவை பற்றி முதன்முதலில் ஆராயப்பட்டது. எ-டு இண்டோல் 3, அசெட்டிகக்காடி, கிப்ரெலின்கள்.

31. இவற்றின் பயன் யாது?

இவை தோட்டக்கலையிலும் வேளாண்மையிலும் அதிகம் பயன்படுபவை.

32. கிபரிலிகக்காடிகள் என்பவை யாவை?

இவை தாவரத்தை வளர்க்கும் வேதிப்பொருள்கள். கியரில்லாபுஜிகுரை என்னும் பூஞ்சையிலிருந்து கிடைப்பது.

33. கேலிகக்காடியின் பயன் யாது?

மைகள் செய்யப் பயன்படுவது.

34. பசுமை இல்லம் என்றால் என்ன?

பருவம் தவறிய தாவரங்களைப் போதிய தட்பவெப்பக் கட்டுப்பாட்டுடனும் பாதுகாப்புடனும் வளர்க்கும் கண்ணாடிக்கூடம்.

35. வளர்ப்பு ஊடகம் என்றால் என்ன?

வளர்ப்புக்கரைசல். ஊட்டங்கள் சேர்ந்த கலவை. நுண்ணுயிரிகள், பூஞ்சை முதலியவற்றை வளர்க்கப் பயன்படுவது.

36. நுண்புழைக் கவர்ச்சியின் சிறப்பு யாது?