பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நீர்மங்கள் தாமாக ஒடுங்கிய திறப்பின் வழியாக உயரும் நிகழ்ச்சி. நிலத்தடி நீரைத் தாவரங்கள் உறிஞ்சிப் பயன்படுத்திக் கொள்ள இது உதவுகிறது.

37. நுண்புழைநீர் என்றால் என்ன?இதன் பயன்கள் யாவை?

நுண்புழைக்கவர்ச்சியால் தாவரங்களில் ஏறும் நிலத்தடிநீர்.

38. இதன் பயன்கள் யாவை?

1. தாவரத்தண்டு வழியாக ஊட்டநீர் தாவரத்தின் மற்றப் பகுதிகளுக்குச் செல்லுதல்.

2. இந்நெறிமுறையில் தானே மை நிரப்பும் ஊறி, மை உறிஞ்சும் தாள், பூத்துணித்துண்டுகள் ஆகியவை வேலை செய்கின்றன.

39. ஊடுபரவுமானி என்றால் என்ன?

படலப்பரவு அழுத்தத்தை அளக்க உதவுங் கருவி.

40. ஊடுபரவல் என்றால் என்ன?

படலம் மூலம் இருகரைசல்கள் பரவல். அடர்குறை கரைசல் ஒருவழிச்செல் படலம் வழியாக அடர்மிகு கரைசலுக்குச் செல்லுதல். எ-டு. வேர்கள் ஊட்டநீரை உறிஞ்சுதல்.

41. ஊடுபரவழுத்தம் என்றால் என்ன?

ஒரு வழிச்செல் படலத்திற்கு எதிர்ப்பக்கங்களிலுள்ள கரைசல்களின் செறிவு வேறுபாடுகளால் உண்டாகும் சமநிலை.

42. நுனி (முனை நோக்கியது என்பது எதைக் குறிக்கின்றது?

இயக்கம், வேறுபாடு அடைதல் முதலியவை அடியிலிருந்து நுனிநோக்கி அமைவதைக் குறிப்பது. காட்டாகப் பூக்களின் வளர்ச்சி நுனிநோக்கியது. தாவரத்தின் வழியாக நீர் செல்லுதல் நுனிநோக்கியே அமையும்.

43. தூண்டல் இயக்கங்கள் என்பவை யாவை?

இவை திசைச்சாரா அசைவுகள். தாவரங்களுக்கே உரியவை.