பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


52. குறுக்குவாட்டு நாட்டம் என்றால் என்ன?

தூண்டல் விளைவு நோக்கி அமையும் தாவர வளர்ச்சி. காட்டாகப் பக்கக் கிளைகளும் வேர்களும் ஈர்ப்புத் தூண்டலின் சாய்கோணம்நோக்கி அமையும்.

53. காற்றுநாட்டம் என்றால் என்ன?

இது ஒருவகை வேதிநாட்டம். இதில் நிலைப்படுத்துக் காரணி உயிர்வளி.

54. புவிநாட்டம் என்றால் என்ன?

புவிஈர்ப்பினால் தாவரத்தில் உண்டாகும் வளைவியக்கம். தொட்டிச்செடியின் தண்டு கிடைமட்டமாக வைக்கப்பட்டாலும் வேர்கீழ் நோக்கியும் தண்டுமேல் நோக்கியுமே வளரும்.

55. வேதிநாட்டம் என்றால் என்ன?

வேதித்தூண்டலுக்கேற்றவாறு உண்டாகும் துலங்கல். இதில் வேறுபட்ட வளர்ச்சியினால் உயிரியல் ஒழுங்கமைவு உண்டாகும்.

56. முழுத்தாவர ஊட்டம் என்றால் என்ன?

ஒர் உயிரி தனக்குவேண்டிய உணவைத் தானே உருவாக்கி ஊட்டம் பெறுதல். எ-டு பசுந்தாவரங்கள்.

57. தம்மூட்ட வாழ்விகள் என்றால் என்ன?

கனிமப் பொருள்களிலிருந்து தம் உணவைத் தாமே உண்டாக்கிக் கொள்ளும் உயிரிகள், தாவரங்கள்.

58. தன்னூட்டம் என்றால் என்ன?

ஊட்டத்தில் ஒரு வகை. தன் உணவைத் தானே பெறும் நிலை, தாவரங்கள்.

59. ஊனுண்ணித் தாவரம் என்றால் என்ன?

சிறிய பூச்சிகளை உட்கொண்டு நைட்ரஜனைப் பெறும் தாவரம். நைட்ரஜன் குறை ஏற்படும் பொழுது இது நடைபெறுகிறது. எ-டு. உட்ரிகுலேரியா, நெபன்தஸ்.

60. இந்தியாவிலுள்ள பூச்சி உண்ணும் குடப்பைத் தாவரம் எது?

நெபன்தஸ்.

61. நீர்க்கவர்ச்சி என்றால் என்ன?