பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


ஒவ்வொரு உயிருக்கும் இருபெயர்கள் உண்டு. ஒன்று பேரினப் பெயர். மற்றொன்று சிறப்பினப்பெயர். எ-டு அய்பிஸ்கஸ்ரோசாசினன்சிஸ் (செம்பருத்தி) என்று பெயர். இதில் முன்னது பேரினப்பெயர். பின்னது சிறப்பினப் பெயர்.

11. இதை உருவாக்கியவர் யார்?

ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலார் கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் 1735இல் உருவாக்கப்பட்டது.

12. இதன் சிறப்பென்ன?

1. அறிவியல் பெயராதலால் அனைத்துலக அறிவியலாரும் இதையே பின்பற்றுகின்றனர்.

2. சிறப்பினப் பெயர் இருந்தாலேயே ஒர் உயிரை நாம் இனங்கண்டறிய முடியும்.

13. உயிரியல் வகை என்றால் என்ன?

ஒரே மரபணு இயைபுடைய தனிஉயிர்கள். இயற்கையான தொகுதியாக அமைந்திருத்தல், எ-டு. பால்தொகுதி.

14. கண்ணறை வகைப்பாட்டியல் என்றால் என்ன?

உயிரிகளை வகைப்படுத்துவதில் நிறப்புரிகளின் எண்ணிக்கை, அளவு, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளுதல்.

15. உயிரியல் வகைப்பாட்டியல் என்றால் என்ன?

சிறப்பினங்களுக்கிடையே உள்ள உறவுகளை ஆராய, ஆய்வு வகைப்பாட்டு நுணுக்கங்களைப் பயன்படுத்தும் துறை. நுணுக்கங்களாவான ஒப்பியல் வகைப்பாட்டியல், சூழ்நிலைச் சான்றுகள், கலப்பின ஆய்வுகள், உயிரணு ஆய்வு முதலியவை.

16. உயிரியல் வேதிவகைப்பாட்டியல் சிறப்பு என்ன?

உயிரிகளை வேதிப்பண்புகள் அடிப்படையில் பாகுபாடு செய்தல், மரப்பால் அடிப்படையில் தாவரக்குடும்பத்தின் இருபெரும் பிரிவுகளாகிய ஆஸ்டிராய்டி, சிக்கோளியாய்டி ஆகிய இரண்டும் பிரிக்கப்பட்டிருத்தல்.

17. எண்சார் வகைப்பாட்டியல் என்றால் என்ன?

உயிர்த்தொகுதியின் பல பண்புகளின் வேறுபாடுகளை எண்ணியல் பகுப்பு செய்து, அதன் அடிப்படையில்