பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53


வகைப்பாடு மேற்கொள்ளல். இதில் பண்புகள் முதலிடம் பெறுபவை.

18. பெயராளர் என்றால் என்ன?

ஒரு டேக்சானின் முதல் தகுதிப் பெயரைவெளியிடுபவர். வகைப்பாட்டியல் சொல்.

19. திணைத்தாவரங்கள் என்றால் என்ன?

மரவடைகள். குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழுந் தாவரங்கள். எ-டு. நீர்வாழ்தாவரங்கள், வறண்ட நிலத் தாவரங்கள்.

20. நுண்திணைத் தாவரங்கள் என்பவை யாவை?

பாசி, பூஞ்சை முதலிய தாவரங்கள். இவை குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவை.

21. நிலைகாட்டும் சிறப்பினம் என்றால் என்ன?

சுட்டும் சிறப்பினம். ஓரிடத்திலுள்ள சூழ்நிலைகளை அளக்கப் பயன்படும் உயிரி. பூப்பாசிகள் மாசுபடும் அளவையும் டியூபிபெக்ஸ் புழுக்கள் குறைந்த அளவு உயிர்வளியையும் காட்டுபவை.

22. அயல்வகை (அலோடைப்) என்றால் என்ன?

பால்தன்மையில் ஒத்த வகைக்கு எதிரான துணைவகை.

23. வகைமாதிரி என்றால் என்ன?

சிறப்பினம் அல்லது துணைச்சிறப்பினத்தை விளக்கவும் பெயரிடவும் உதவும் போலிகை.

24. வகைப்பாட்டியலின் அலகுகள் யாவை?

1. உலகம் 2. பெரும்பிரிவு.3. வகுப்பு. 4. வரிசை. 5. குடும்பம். 6. பேரிளம். 7. சிறப்பினம்.

25. இந்த அலகுகளில் அடிப்படையானது எது?

சிறப்பினமே.

26. வகுப்பு என்றால் என்ன?

வகைப்பாட்டு அலகுகளில் ஒன்று. ஒத்த பல வரிசைகளைக் கொண்டது. எ-டு. இரு விதையிலைத் தாவரங்கள்.

27. குடும்பம் என்றால் என்ன?

உயிரிச் சமூகத்தின் வகையலகு. பேரினத்திற்கும் வரிசைக்கும் நடுவிலுள்ளது. எ.டு. மால்வேசி.