பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


தாவரம் - சூரியகாந்தி.

36. இருபருவப் பயிர்கள் என்றால் என்ன?

தம் வாழ்க்கைச் சுற்று இரண்டு ஆண்டுகளில் நிறைவுபெறும் தாவரங்கள். முதலாண்டு பூத்தலும் இரண்டாமாண்டு காய்த்தலும் நடைபெறும். எ-டு. வெங்காயம், முள்ளங்கி,

37. பல பருவப்பயிர்கள் என்றால் என்ன?

பல ஆண்டுகள் வாழும் தாவரங்கள், மா, பலா.

38. பல்லாண்டுத் தாவரங்கள் என்பவை யாவை?

பல ஆண்டுகள் வாழ்பவை. எ-டு. ஆலமரம்.

39. பயிர்க்கொல்லி என்றால் என்ன?

தாவர வளர்ச்சியைத் தடைப்படுத்தும் அல்லது அழிக்கும் வேதிப்பொருள்.

11. பயிர்ப்பதனத் திரட்டு

1. பயிர்ப்பதனத் திரட்டு என்றால் என்ன?

முறையாக அமைத்து உலர்த்தி உரிய முறையில் பாதுகாக்கப்படும் தாவரத்திரட்டு.

2. பயிர்ப்பதனத்திரட்டின் வகைகள் யாவை?

1. தனியார் பதனத்திரட்டு
2. கல்விநிலையப் பதனத்திரட்டு.
3. வட்டாரப் பதனத்திரட்டு.
4. தேசியப் பதனத்திரட்டு.
5. அனைத்துலகப் பதனத்திரட்டு.

3. இந்தியத் தேசியப் பயிர்ப்பதனத் திரட்டு எங்குள்ளது?

இது கோல்கத்தாவிலுள்ளது.

4. இதை நிறுவியது யார்? எப்பொழுது?

1793இல் ஆங்கிலக் கிழக்கு இந்தியக் கம்பெனியார் நிறுவினர்.

5. இதன் முதல் மேற்பார்வையாளர் யார்?

கர்னல் இராபர்ட் கிட்