பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56



6. இதிலுள்ள பயிர்ப்பதனத் திரட்டுகள் எத்தனை?

1 மில்லியனுக்கு மேல்.

7. வட்டாரப் பயிர்ப்பதனத் திரட்டு எங்குள்ளது?

கோயமுத்தூரில் உள்ளது.

8. பேராசிரியர் பைசன் அரும்பணி யாது?

இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஒரு திரட்டு ஒன்றை அமைத்துள்ளார்.

9. அனைத்துலகப் பயிர்ப்பதனத் திரட்டில் பழமையானது எது?

இங்கிலாந்தில் கியு என்னும் ஊரிலுள்ள அரசு தாவரவியல் தோட்டத்தில் அமைந்துள்ளது. 1969ஆம் மதிப்பீட்டின்படி இதில் 6,500,000 திரட்டுகள் உள்ளன.

10. பயிர் பதனத் திரட்டிலுள்ள நுட்பங்கள் யாவை?

1. சேகரித்தல்
2. அமுக்குதல்
3. உலர்த்துதல்
4. நச்சுப்படுத்தல்
5. பொருத்துதல்
6. வகைப்படுத்தல்

11. பயிர்பதனத் திரட்டின் பயன்கள் யாவை?

1. பல வகைப்பட்ட வகைப்பாட்டியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுவது.
2. இதில் உலகிலுள்ள எல்லாச்சிறப்பினங்கள் உள்ளதால், ஆராய்ச்சி செய்வது எளிது.
3. புவியியல் பரவலை அறியலாம்.
4. ஒரு நாட்டின் தாவரச் செல்வத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
5. தாவரவியலைக் கற்பிக்க உதவுகிறது.
6. தாவர வளப்புள்ளி விவரங்கள் இத்திரட்டினால் பாதுகாக்கப்படுகின்றன.