பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58



1. துத்தி பொதுவாகக் காணப்படும் ஒரு தாவரம். பொருளாதாரச் சிறப்பும் (இழை) மருத்துவ் சிறப்பும் உள்ளது.
2. வெண்டை - தோட்டச்செடி இதன் காய் சமையலுக்கேற்றது.
3. சணல் செடி- இதன் இழை சணல் செய்யப் பயன்படுவது.
4. பருத்திச்செடி-இது பொருளாதாரச் சிறப்புள்ள பஞ்சு தருவது.
5. பூவரசு- இதன் கட்டை பல மரவேலைகளுக்குப் பயன்படுவது.
6. இலவு இலவம்பஞ்சு தருவது.

13. ஒருவிதையிலைத் தாவரக்
குடும்பம் - தென்னை

1. இதன் வளரியல்பு யாது?

தென்னைகள் நிலைத்து வாழ்பவை. தண்டு கிளைக்காதது. நேராக இருக்கும். முடிவில் தழைப்பிலைகள் இருக்கும். வேர்கள் நார்வேர்கள் அல்லது வேற்றிட வேர்கள். தண்டில் மட்டை விழுந்த வடுக்கள் இருக்கும்.

2. இலைகள் எவ்வாறு உள்ளன?

இவற்றை ஒலைகள் என்கிறோம். மட்டையில் நீளமாக ஒன்றுவிட்டு ஒன்று இரண்டு பக்கமும் அமைந்திருக்கும். வலுவான நடுநரம்பு இலையில் உண்டு. இதுவே ஈர்க்கு, மட்டைகளுக்கு அடியில் பாதுகாப்பிற்குப் பன்னாடை இருக்கும்.

3. பூக்கொத்து எவ்வாறு இருக்கும்?

பெரிய அளவில் இருக்கும். ஒரு மடலில் அமைந்திருக்கும். இதற்குப் பாளை என்று பெயர்.