பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59



4. பூக்கள் எவ்வாறு இருக்கும்?

ஒருபால் பூக்கள், ஓரில்லப் பூ, ஈரில்லப்பூ

5. இதழ்வட்டம் என்றால் என்ன?

புல்லி, அல்லி வேறுபாடு இல்லாதது. 6க்கு மேற்பட்ட மடல்கள் இருக்கும். இரு சுற்றுகளில் அமைந்திருக்கும்.

6. மகரந்தத் தாள்கள் எவ்வாறிருக்கும்?

6 உண்டு. சில சமயங்களில் பல.

7. சூல்பை எவ்வாறு உள்ளது?

மேற்சூல்பை. மூன்று கனி இலைகள் உண்டு. பெண்பூவில் மலட்டு மகரந்தத்தாள்கள் இருக்கும்.

8. கனி எப்படிப்பட்டது?

சாற்றுக்கனி அல்லது ஒட்டுக்கனி.

9. மகரந்தச் சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது?

காற்றினால் நடைபெறுகிறது.

10. இக்குடும்பத் தாவரங்கள் சிலவற்றைக் கூறுக.

1. தென்னை. 2. பனை, 3. ஈச்சை. 4. பாக்குமரம். 5. பிரம்புமரம். 6. சவ்வரிசிப்பனை. 7. தாளிப்பனை.

11. இக்குடும்பத்தின் பொருளாதாரச் சிறப்புகள் யாவை?

1. தென்னையிலிருந்து தேங்காய் கிடைக்கிறது. இதிலிருந்து தேங்காய் எண்ணெய் பெறப்படுகிறது. இதன் ஒலைகள் கீற்றுமுடையப் பயன்படுகிறது. இதன் மட்டையிலிருந்து கயிறு செய்யப்படுகிறது. இதிலிருந்து கள்ளும் இறக்கப்படுகிறது.
2. பனையிலிருந்து பனங்காய், பனைமட்டை பெறப்படுகின்றன. பனங்கள்ளிலிருந்து பதனிர் செய்யப்படுகிறது. இதன்மரம் சாத்துகளாக அறுத்துக் கொட்டகைகள் போடப் பயன்படுகின்றன. பனங்கற்கண்டு, கருப்பட்டி முதலியவை இதிலிருந்து பெறப்படுகின்றன.
3. பிரம்புக் கூடைகள், நாற்காலிகள் பின்னப் பயன்படுபவை.