பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60




14. குடும்பங்களை அடையாளங் கண்டறிதல்

1. இருவிதை இலைத் தாவரங்கள் என்று எப்படி அறிவது?

1. விதையில் இரு வித்திலைகள் இருக்கும்.
2. குழாய்த் தொகுதி திறந்தநிலை உள்ளது.

2. ஒரு விதையிலைத் தாவரங்கள் என்று எப்படி அறியலாம்?

1. விதையில் ஒரு வித்திலை இருக்கும்.
2. ஒலைகள் மட்டும் உண்டு.

3. மால்வேசிக் குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறியலாம்?

1. மலர்கள் ஆரச்சமச்சீருள்ளவை.
2. அல்லிவட்டம் திருகு இதழ் அமைவு உள்ளது.
3. ஒரு முடி மகரந்தத்தாள்கள்
4. மகரந்தப்பைகள் அவரைவிதை வடிவம்.
5. அச்சுச் சூலமைவு.

4. பேப்பேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறிவது?

1. பூக்கள் இருபக்கச் சமச்சீருள்ளவை.
2. அல்லிவட்டம் கீழிறங்கி அடுக்கு இதழமைவில்
3. மகரந்தத்தாள்கள் ஒரு முடி அல்லது இருமுடியில்
4. விளிம்புச் சூலமைவு.

5. சொலானேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறிவது?

1. இலைகள் இலையடிச்சிதல்கள் அற்றவை.
2. மலர்கள் மேற்சூல்பை உள்ளவை.
3. வளமான மகரந்தத்தாள்கள்.
4. சூற்பை ஒவ்வொரு அறையிலும் பல சூல்கள் இருக்கும்.
5. அச்சுச் சூலமைவு.

6. லேமியேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறியலாம்?

1. எதிரிலை அமைவு அல்லது வட்ட அமைவு.
2. மகரந்தத்தாள்கள் பொதுவாக 4.
3. சூற்பை இரு அறைகள் கொண்டது. ஒவ்வொன்றிலும் 2 சூல்கள்.
4. அடிச்சூலமைவு.