பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64



16. குச்சிவடிவ உயிரி இயல் என்ன?

குச்சிவடிவ நுண்ணுயிரிகளை ஆராயும் உயிரியல் துறை.

17. குச்சிவடிவ உயிரிகள் (பாக்டீரியா) என்றால் என்ன?

இவற்றின் வடிவம் குச்சி. இவை கோல், சுருள், கோளம் ஆகிய மூன்று வடிவங்களில் உள்ளவை. நுண்ணோக்கியில் பார்க்க ஒற்றைக் கண்ணறைத் தாவரங்கள்.

18. இவை ஏன் ஒட்டுண்ணிகளாகவும் சாறுண்ணிகளாகவும் உள்ளன?

பச்சையம் இல்லாததால் தங்கள் உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்ள இயலாது. ஆகவே, ஒட்டுண்ணி களாகவும் வாழ்கின்றன.

19. குச்சியியல் உண்ணிகள் என்றால் என்ன?

இவை நச்சுயிரிகள். தம் வால் மூலம் குச்சி வடிவ உயிருடன் இணைந்து தொற்றுபவை. இவை குச்சிவடிவ உயிரிகளுக்கு ஒட்டுண்ணிகள் ஆகும்.

20. குச்சியியல் வேரிணை வாழ்வு என்றால் என்ன?

வேருக்கும் குச்சிவடிவ உயிரிகளுக்கும் இடையே அமைந்த பிணைப்பு வாழ்வு. வேர் முண்டுகளில் இவை தங்கித் தங்களுக்கு வேண்டிய ஊட்டத்தைப் பெறுகின்றன. மாறாக, அவை நைட்ரேட் உப்புகளை வேர் முண்டுகளில் உண்டாக்குகின்றன. இவ்வாறு இவை இரண்டும் ஒன்றுக்கு மற்றொன்று உதவி வாழ்பவை.

21. நீளிழை என்றால் என்ன?

கசை இழை. சில கண்ணறைகளின் சாட்டை போன்ற நீட்சி. இடம்பெயர்இயக்கத்திற்கு உதவுவது. எ-டு. குச்சிவடிவ உயிர்கள்.

22. இரு நீளிழை கொண்ட உயிரி யாது?

கண்ணறையின் ஒவ்வொரு முனையிலும் இரு நீண்ட இழைகளைக் கொண்ட குச்சி வடிவ உயிர்கள்.

23. பூஞ்சணம் என்பது யாது?

பூஞ்சை இனத்தைச் சார்ந்தது. உணவுப்பொருள்களில் படிந்து வாழ்வது. எ-டு. ரொட்டிப் பூஞ்சணம்.

24. பூஞ்சைகள் என்பவை யாவை?