பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65


சாறுண்ணிகளாகவும் ஒட்டண்ணிகளாகவும் வாழும் பூக்காத் தாவரங்கள். பச்சையமில்லாததால் கூட்டு வாழ்விகள்.

25. பூஞ்சைக் கொல்லி என்றால் என்ன?

பூஞ்சைகளைக் கொல்லும் வேதிப்பொருள்.

26. பூஞ்சை இயல் என்றால் என்ன?

பூஞ்சைகளை ஆராயுந்துறை.

27. பூவிலங்கு என்றால் என்ன?

தாவர இயல்புகளையும் விலங்கு இயல்புகளையும் பெற்றுள்ள உயிரி. ஆனால், விலங்காகவே கருதப்படுவது. எ டு. சேற்றுப்பூஞ்சை.

28. பூஞ்சைய வேரி என்றால் என்ன?

பூஞ்சையில் நுண்ணிழைகளுக்கும் உயர்தாவர வேர்களுக்கும் இடையே உள்ள இயைபு.

29. இவ்வேரிகளின் வகைகள் யாவை?

1. புறஊட்டவேர்கள் - மரங்கள்.
2. அகஊட்ட வேர்கள் - ஆர்க்கிட்டுகள்.

30. படலகம் என்றால் என்ன?

பூஞ்சையின் சிதல் தாங்கும் பரப்பு.

31. நுண்பூஞ்சிழை என்றால் என்ன?

பூஞ்சையின் கிளைத்த இழையுடல்.

32. பூப்பாசி என்றால் என்ன?

பூஞ்சையும் பாசியும் சேர்ந்த கூட்டுத் தாவரங்கள். பூக்கா வகையைச் சார்ந்தது. எ-டு. சாந்தோரியா.

33. பையகப் பெண்ணியம் என்றால் என்ன?

பூஞ்சையிலுள்ள பெண் பாலுறுப்பு. கருவுற்றபின் பூஞ்சை வகைக் கிளைகளை உண்டாக்குவது.

34. பையகம் என்றால் என்ன?

பை போன்ற உறுப்பு. இது விரிந்த கண்ணறை. குன்றல் பிரிவில் எட்டுச் சிதல்களை உண்டாக்குவது.

35. வித்தியம் என்றால் என்ன?

பூஞ்சையில் காணப்படும் வித்துறுப்பு. சிதல்கள் முதிர்ச்சியடையும் வரை மூடியிருக்கும்.

5