பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66



36. காளானின் பயன்கள் யாவை?

1. உணவு. 2. ஒயின் தயாரிக்கப் பயன்படுவது.

37. ஈஸ்ட்டு என்பது யாது?

சைமேஸ் என்னும் நொதியை உண்டாக்கும் ஒரனுப் பூஞ்சை. ரொட்டித் தொழிலிலும் சாராய வடிதொழிலிலும் பயன்படுவது. அரும்புதல் மூலம் இனப்பெருக்கம்.

38. போலிப்பூஞ்சிழை என்றால் என்ன?

மீண்டும் மீண்டும் அரும்புதல்நடைபெறுவதால், உயிரணுக்கள் தளர்ச்சியாகத் தொடர்களில் இணைந்திருக்கும். எ-டு. ஈஸ்டு.

39. முதல் தண்டகம் என்றால் என்ன?

சிதலினால் உண்டாக்கப்படும் பெரணியின் கருப்பயிர். இதயவடிவத்தில் பசுமையாக இருக்கும். நிலைப்பளிக்க வேரிகள் உண்டு. இதில் ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இருக்கும். கருப்பயிர்த் தலைமுறையை உண்டாக்குவது.

40. ஆணியம் (ஆந்திரிடியம்) என்றால் என்ன?

பாசிகள், மாசிகள், பெரணிகள் ஆகியவற்றில் காணப்படும் ஆண் இனப்பெருக்க உறுப்பு. இது ஆண் அணுக்களை உண்டாக்குவது.

41. ஆணியல் அணுக்கள் என்றால் என்ன?

ஆண் இனப்பெருக்க உறுப்பில் உண்டாகும் நுண்ணிய அணுக்கள்.

42. பெண்ணியம் (ஆர்க்கிகோனியம்) என்றால் என்ன?

குடுவை வடிவப் பெண் இனப்பெருக்க உறுப்பு. பெரணிகளிலும் பாசிகளிலும் காணப்படுவது.

43. அல்சிதல் தோற்றம் என்றால் என்ன?

பூக்காத் தாவர வாழ்க்கை வரலாற்றில் சிதல் தோன்றாமல், சிதல்தாவரத்திலிருந்து உறுப்பு நிலையில் பாலணுத் தாவரம் தோன்றுதல்.

44. மாசித் தாவரங்கள் என்றால் என்ன?

பூவாத் தாவரங்கள். இவற்றிற்கு இலை, தண்டு என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உண்மையான வேர்கள் இல்லை. சிதல்கள் பைகளில் உண்டாகும். இவற்றின்