பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67


வாழ்க்கை வரலாற்றில் தலைமுறைமாற்றம் உண்டு. எ-டு மாசிகள், கல்லீரல் தட்டுகள்.

45. காற்றுப்பருகா உயிரி என்றால் என்ன?

தான் வாழக் காற்று தேவை இல்லாத உயிரி. அதாவது உயிர்வளி தேவை இல்லை. எ-டு சில குச்சி வடிவ உயிரிகள்.

46. காற்றுப் பருகா மூச்சு என்றால் என்ன?

ஈஸ்ட், குச்சி வடிவ உயிரிகள், தசை முதலியவற்றில் நடைபெறும் மூச்சு. கரிமப்பொருள் முழுவதும் ஆக்சிஜன் ஏற்றம் பெறுவதில்லை. ஆகவே, உண்டாகும் ஆற்றலும் குறைவு.

47. காற்றுப்பருகுயிரி என்றால் என்ன?

தான் வாழக் காற்றை உட்கொள்ளும் உயிரி, தாவரம் விலங்கு.

48. காற்றுப் பருகுமூச்சு என்றால் என்ன?

இதில் தடையிலா உயிர்வளி கரிமப் பொருள்களை ஏற்றஞ் செய்வதால், கரி இரு ஆக்சைடும் நீரும் உண்டாகும். அதிக அளவு ஆற்றல் கிடைக்கும்.

49. முனை வளர் உயிரி என்றால் என்ன?

தன் முனையில் வளர்புள்ளியுள்ள விதையிலாத் தாவரம். எ-டு. பெரணி, பாசி.

50. வெளியேற்றல் என்றால் என்ன?

சிதல் (ஸ்போர்) தன் காம்பிலிருந்து வலிய வெளித் தள்ளப்படுதல்.

51. கோணவாட்டு வளர்ச்சி என்றால் என்ன?

முனை முடிவுறு வளர்ச்சி. இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சியால், மாசிகளில் முதலச்சு முடிவுறுவதால், பின் வளர்ச்சி ஏற்படும். இந்நிலையில் முதலச்சு நேராக இருக்கும்.

52. தலைமுறை மாற்றம் என்றால் என்ன?

பூக்காத் தாவரங்களின் வாழ்க்கை வரலாற்றில் மாறிமாறி வரும் இரு தலைமுறைகளுக்குத் தலைமுறை மாற்றம் என்று பெயர், பெரணி.

53. இதிலுள்ள இரு தலைமுறைகள் யாவை?