பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70



73. பெரணிகள் என்பவை யாவை?

வெப்ப மண்டலத்தில் வாழும் செடி வகைத் தாவரங்கள் இலை, தண்டு, வேர் என்னும் உடலமைப்பு வேறுபாடு உண்டு. வேர் தண்டு வேராகும். சிதல்கள் இனப்பெருக்கத்திற்கு உண்டு. வாழ்க்கை வரலாற்றில் தலலமுறை மாற்றம் உண்டு.


16. கண்ணறையும் திசுவும்

1. முன்கணியம் (புரோட்டோபிளாசம்) என்றால் என்ன?

உயிரணுவின் இழுதுபோன்ற பொருள். உயிரின் இயற்பியல் அடிப்படை. இதில் கண்ணறைக் கணியம், உட்கரு, கண்ணறைச் சுவர், கண்ணறைப்படலம் முதலிய பகுதிகள் உள்ளன.

2. முன்கணிய இயக்கங்கள் யாவை?

1. குற்றிழை இயக்கம் - கிளமிடோமோனாஸ் 2. அமீபா இயக்கம் - சேற்றுப்பூஞ்சை. 3. நீரோட்ட இயக்கங்கள் - டிரேடன்ஸ்கியா என்னும நிலத்தாவரம்.

3. தக்கை அமைப்பிலிருந்து முதன்முதலில் கண்ணறையைக் கண்டறிந்தவர் யார்?

இராபர்ட் ஹூக்.

4. கண்ணறைக் கொள்கையைத் தாவரத்தைப் பொறுத்த மட்டில் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?

1838இல் ஷெலய்டன் என்பார் கண்டறிந்தார். எல்லாத் தாவரத்திசுவும் கண்ணறைகளாலானது என்றார்.

5. இக்கொள்கையை விலங்குகளுக்கும் விரிவுபடுத்தியவர் யார்? எப்பொழுது?

1839இல் சுவான் என்பார் விரிவுபடுத்தினார்.

6. கண்ணறை (செல்) என்றால் என்ன?

உயிரணு. உயிரின் அடிப்படை அலகும் அமைப்பலகும் ஆகும்.

7. இதிலுள்ள உயிர்ப்பொருளின் பெயர் என்ன?