பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72


1. தாவரக் கண்ணறைக்குக் கண்ணறைச் சுவர் உண்டு. விலங்குக் கண்ணறைக்கு இது இல்லை.

2. கோல்கை அமைப்பு கருவி விலங்குக் கண்ணறையில் உண்டு. தாவரக் கண்ணறையில் இல்லை.

17. கண்ணறைக் கொள்கைகள் யாவை?

1. உயிரிகளின் அமைப்பலகும் வேலையலகும் உயிரணு.

2. அனைத்து உயிரணுக்களும் முன்னரே தோன்றிய கண்ணறைகளிலிருந்தே உண்டாகின்றன.

18. கண்ணறைப் பிரிவின் வகைகள் யாவை?

1. இழைப்பிரிவு (மைட்டாசிஸ்)

2. குன்றல் பிரிவு (மீயாசிஸ்)

3. இழையில் பிரிவு (ஏமிட்டாசிஸ்).

4. கட்டவிழ் உட்கருப்பிரிவு.

19. கண்ணறைப் பிரிவிலுள்ள நான்கு நிலைகள் யாவை?

1. முதல்நிலை

2. நடுநிலை

3. பின்னிலை

4. முடிவுநிலை.

20. இழைப்பிரிவு என்றால் என்ன?

இதில் உட்கரு மறைமுகமாகப் பிரியும். இது தாவரத்தின் வளர்ச்சிப் பகுதியிலும் தண்டு முனையிலும், வேர் முனையிலும் நடைபெறுவது.

21. இழைப்பிரிவை (மைட்டாசிஸ்) ஆராய்ந்தவர் யார்? எப்பொழுது தம் முடிவுகளை வெளியிட்டார்?

வால்தர் பிளிமிங் இழைப்பிரிவை ஆராய்ந்தவர். தம் முடிவுகளை 1882இல் வெளியிட்டார்.

22. நேர்முகப்பிரிவு என்றால் என்ன?

கண்ணறைப் பிரிவில் உட்கரு நேரடியாகப் பிரிதல்.

23. குன்றல் பிரிவு என்றால் என்ன?

இதில் நிறப்புரிகள் இருமநிலையிலிருந்து (2n) ஒருமநிலைக்குக் குறைக்கப்படுகின்ற. ஆண் அணுவில் 23 ஒற்றை நிறப்புரியும், பெண் அணுவில் 23 ஒற்றை நிறப்புரியும் இருக்கும். இவை இரண்டும் கூடி உருவாகும்