பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77


முன்மரக்குழாய்கள், நுண்கடத்திகள் ஆகியவற்றின் உட்சுவரில் வளைய வளர்ச்சி ஏற்படுவது.

17. சூழ்நிலைஇயல்

1. சூழ்நிலை இயல் என்றால் என்ன?

தாவரங்கள் விலங்குகள் ஆகியவற்றிற்கும் சூழ்நிலைக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்வது.

2. இச்சொல்லை உருவாக்கியவர் யார்? அவர் கூறும் விளக்கம் என்ன?

1855இல் ரெய்டர் என்னும் விலங்கியலார் இச்சொல்லை உருவாக்கினார்.

3.சூழ்நிலை என்னும் சொல்லுக்கு இரு விலங்கியலார் கூறும் இலக்கணம் என்ன?

"உயிரினங்களுக்கும் சூழ்நிலைக்கும் இடையே உள்ள பரிமாற்றம்" - ஹெக்கல்

"சூழ்நிலைத் தொகுப்பின் அமைப்பு, அதன் வேலை ஆகியவை பற்றி அறிவதாகும்" - ஒடம்

4. சூழ்நிலை இயலின் இரு வகைகள் யாவை?

1. தற்சூழ்நிலைஇயல் 2. தொகுசூழ்நிலைஇயல்

4(அ). தற்சூழ்நிலை இயல் என்றால் என்ன?

தற்சூழியல். உயிரிகளின் தனிவகைகளுக்கும் அவற்றின் சூல்நிலைகளுக்கும் இடையேயுள்ள தொடர்பினை ஆராயும் துறை.

5. தொகுசூழ்நிலை இயல் என்றால் என்ன?

ஓரிடத்தில் தொகுதியாக வாழும் உயிரினக் கூட்டங்களின் அமைப்பு, வளர்ச்சி ஆகியவை பற்றி ஆராயும் சூழ்நிலையலின் ஒரு பிரிவு .

6. தனிவளரியல் என்றால் என்ன?

ஒர் உயிரியின் வாழ்க்கை வரலாற்றில் நடைபெறும் பல மாற்றங்களையும் ஆராயுந்துறை.

7. வளரியல்பு என்றால் என்ன?