பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79



ஓர் உயிரி சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளுதல். இதில் உடல் மாற்றமோ உடலியல் மாற்றமோ வேதிமாற்றமோ இருக்கும். எ-டு. தவளையின் மாரிக்கால உறக்கம்.

16. உயிரிலிச்சூழ்நிலை என்றால் என்ன?

உயிர்களை உக்குவிக்கும் இயல்புக் காரணிகளும் வேதிக்காரணிகளும் ஆகும்.

16-அ. உயிரியல் தொகுதி என்றால் என்ன?

குறிப்பிட்ட பகுதியில் வாழும் குறிப்பிட்ட உயிர்களின் தொகுதி.

17. உயிர்வாழ்பகுதி என்றால் என்ன?

பெருவட்டாரச் சமுதாயங்களில் ஒன்று. தனக்கென்று ஒரு தட்பவெப்பநிலையையும் தாவரங்களையும் விலங்குகளையும் கொண்டது. ஒன்று மற்றொன்றாக இணைவது. எ-டு. துந்திரா, இலையுதிர்காடு, பாலை.

18. உயிரியல் துணைத்தொகுதி என்றால் என்ன?

குறிப்பிட்ட பகுதி அல்லது ஊழிக்குரிய திணைத் தாவரங்களும் திணை விலங்குகளும் அடங்கிய தொகுதி.

19. சூழ்நிலைப் புரட்சி என்றால் என்ன?

சூழ்நிலைப் பாதுகாப்பு முன்னேற்றம், புகழ்மிக்க பெண் உயிரியலார் ராசல் கார்சன் என்பார் தம் நூலான அமைதி இளவேனில் மூலம் இப்புரட்சியைத் தொடங்கியுள்ளார்.

20. சூழ்நிலைத் தொகுதி என்றால் என்ன?

ஓரிடத்தில் வாழும் உயிரிகளுக்கும் அவற்றின் இயல்பான சூழ்நிலைகளுக்கும் இடையே ஏற்படும் வினைத்தொகுதி. இதில் உயிருள்ளவை உயிரற்றவை ஆகிய இரண்டும் இடம் பெறுகின்றன.

21. சூழ்நிலை வகை என்றால் என்ன?

குறிப்பிட்ட வளரிடத்திலுள்ள ஓர் உயிர்வகையின் தொகை. இஃது உருவியல் நிலையிலும் உடலியல் நிலையிலும் வேறுபட்டிருக்கும்.

22. சூழ்நிலைத் தகைவுப்பொருள்கள் யாவை?