பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80



சூழ்நிலை ஏற்புள்ள சேர்பொருள்களை உயவிடுபொருளில் சேர்த்தல்.

23. சூழ்நிலைத் தகைவு முறைகள் என்றால் என்ன?

களை எடுத்தல், விதைக்கும் காலத்தை மாற்றுதல், போதிய பாசன ஏற்பாடு, வடிகால், உயிரியல் பூச்சிக் கொல்லிகள் முதலியவை. இம்முறைகள் நிலைப்புள்ள வேளாண்மைக்கு ஏற்றவை.

24. சூழ்நிலைப்படம் என்றால் என்ன?

மாசுகளை விளக்கும் படம். ஆற்றல் செலுத்துகை ஒருங்கமைப்போடு தொடர்புடையது.

25. சூழ்நிலைத்தகைவுப்பொருள்கள் தன்மைகள் யாவை?

இவை மரபுவழிப் பொருள்களை ஒத்தவை. சூழ்நிலையில் தாக்கம் உண்டாக்கதவை. இலேசான எடையுள்ள பொருள்கள், அரிமான எதிர்ப்புப் பொருள்கள் அடங்கியவை.

26. சூழ்நிலைக் கொடுமை என்றால் என்ன?

எதிரிநாட்டின் சூழ்நிலையைக் கெடுத்து, அந்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைமைகளை இன்னலுக்கு ஆளாக்கிப் பொருளாதாரத்தைச் சிதைத்தல். எ-டு. இராக்-குவைத் போரில் அங்குள்ள எண்ணெய் வயல்களுக்கு தீயூட்டியவை.

27. சூழ்நிலை இறக்கப் புள்ளி விவரங்கள் யாவை?

1. மொத்தநிலப்பரப்பில் 1990இல் காடுகள் 40% 1994 13% 27% அழிந்துள்ளது. 2. ஒவ்வோராண்டும் உலக வெப்ப மண்டலக்காடுகள் 17 மில்லி ஹெக்டேர்கள் அளவில் அழிந்துவருதல். 3. இந்தியக் காடுகள் ஒவ்வோராண்டும் 28% அளவுக்கு வெட்டப்படுதல். 4. 22ஆம் நூற்றாண்டிற்கு 60,000 தாவர, விலங்குச் சிறப்பினங்கள் அழியும். இது உலக மொத்தத்தில் 4இல் 1 பங்கு.

28. சூழ்நிலைக் கொடுமையின் வகைகள் யாவை?

1. கிச்சிலிக்காரணி - வேளாண் அழிவுக் காரணி.