பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83



இயற்கையாகத் தோன்றும் உயிர்த்தொகுதி, இதில் வேறுபட்ட உயிரிகள் பொதுச்சூழ்நிலையில் வாழ்பவை.

46. உணவுச் சங்கிலி என்றால் என்ன?

உணவுப் பிணைப்பு. ஓர் இயற்கைச் சமுதாயத்தில் நிலவும் உயிரிகளின் இணைப்பு. இதன்மூலம் உணவு ஆற்றல் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றை மற்றொன்று தின்று அந்நிலைபெறுதல். தாவரங்களை விலங்குகள் உண்ணல், விலங்குகளை மனிதன் கொன்று தின்னல்.

47. இதன் இருவகைகள் யாவை?

1. மேல் உணவுச் சங்கிலி.
2. மட்குணவுச் சங்கிலி.

48. ஒருங்கிணைந்த பண்ணைமுறை என்றால் என்ன?

பயிரிடுவதற்கு உழைப்பு ஆண்டு முழுதும் பயனுறுவகையில் உண்டாக வழிவகுப்பது. ஒரிசா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

49. நீருயிர்வளர்ப்பகம் என்றால் என்ன?

தொட்டிகளில் நீர் ஊற்றி அவற்றில் நீர்வாழ்த் தாவரங்கள் அல்லது விலங்குகள் வளர்க்கப்படுதல். அறிவியல் பயிற்றுவதில் முதல்நிலை அறிவை அளிப்பதில் கல்வித் திட்டத்தில் சிறப்பிடம் பெறுவது.

50. சூழ்நிலைப் பாதுகாப்பின் இன்றியமையாமை என்ன?

ஆற்றல் பாதுகாப்பு, காடுவளர்த்தல் முதலியவை நாட்டுப் பொருளாதாரவளத்தைப் பெருக்க வல்லவை.

51. சூழ்நிலைத் தகைவுப் பொருள்கள் (eco-friendly) என்றால் என்ன ?

சூழ்நிலைக்குப் பகையாக இல்லாதவை. செயற்கை உரங்கள் ஒருவகையில் பகை. ஆனால், மீன்களும், பாசிகளும் அப்படியல்ல. சூழ்நிலைத் தகைவுள்ளவை. சூழ்நிலையோடு ஒத்துச் செல்பவை.

52. சூழ்நிலைச் சுற்றுலா என்றால் என்ன?

சூழ்நிலைத் தொடர்பாக அதற்கேற்றவாறு சுற்றுலாத் துறையை வளர்த்தல்.

53. நீரி என்பது என்ன?