பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85



4. ஈரப்பதம்.

61. காடுகளின் வகைகள் யாவை?

1. வெப்பமண்டலக் காடுகள்.
2. மிதவெப்பமண்டலக் காடுகள்.
3. ஊசியிலைக் காடுகள்.
4. இலையுதிர்க்காடுகள்.

62. சமூகக் காடுகள் என்பவை யாவை?

காடுகள் அழிந்து வருவதால் தற்பொழுது மரவளர்ப்புத் திட்டம் அரசால் பெரிதும் வற்புறுத்தப்படுகிறது. அதன் பெரும்பகுதியாகச் சமூகவளர்ப்புக் காடுகள் விரைவாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் அதிகம் வளர்க்கப்படுபவை கற்பூரத் தைலமரங்கள்.

63. காடுகளின் பயன்கள் யாவை?

1. இயற்கையில் சமநிலையை நிலைநிறுத்துபவை.
2. உணவுப் பொருள்களையும் மரத்தையும் அளிப்பவை.
3. மழைபெய்வதற்குக் காரணமாக உள்ளவை.
4. சுற்றுலா இடங்களாக அமைந்து அந்நியச் செலாவணி அளிப்பவை.

64. ஆல்ப்ஸ் மலைத் தாவரத் தொகுதி என்றால் என்ன?

இது பயிர்களையும் குறுஞ்செடிகளையுங் கொண்டது.

65. காட்டு மேலாண்மை என்றால் என்ன?

இதில் மரங்கள் 10-15 ஆண்டுகளுக்கு ஒருமுறை அடிவரை வெட்டப்படும். வேற்றிடத் தண்டுகள் கிளம்ப இம்முறை மேற்கொள்ளப்படுகிறது. இத்தண்டுகள் விறகுக்கும் வேலிக்கும் பயன்படுபவை. பொதுவாகக் கழித்தல் எனலாம்.

66. காடுபெருக்கம் என்றால் என்ன?

சமுதாய மரங்களை வளர்ப்பதன் மூலம் காடுகளை உருவாக்கல். காடுபெருக்கல் ஒரு தேசியத்திட்டமாகும்.

67. காடழித்தல் என்றால் என்ன?

காடுகளை வெட்டி நீக்குதல். இயற்கைச் செல்வம் அழிவதால் இது நாட்டுக்குப் பெருங்கேடு நாட்டில் மழை குறைய இதுவும் ஒரு காரணமாகும்.