பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68. தொல்தற்காலம் என்பது என்ன?

9000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த காலம். இக்காலத்தில் மனிதன் பழைய கற்கருவிகளைப் பயன்படுத்தினான்.

69. தொல்தாவரவியல் என்றால் என்ன?

அழிந்தொழிந்த தாவர எச்சங்களை அல்லது புதைபடிவங்களை ஆராயும்துறை.

70. தொல்சூழ்நிலை இயல் என்றால் என்ன?

உயிர் அறிவியல்களில் ஒன்று. எச்சங்களை ஆராய்வதன் மூலம் வெளிப்படும் சூழ்நிலை உண்மைகளை ஆராயுந்துறை.

71. தொல்லுலகம் என்றால் என்ன?

உயிரியல் வட்டாரமாகக் கருதப்படும் பழைய உலகம்.

72. வாழும் தொல்படிவம் என்றால் என்ன?

புதைபடிவம். அழிந்தொழிந்த உயிர்களின் சில பண்பியல்புகளைப் பெற்றுள்ள தற்காலச் சிறப்பின உயிரி. எ-டு.கன்னிமயிர் மரம்.

73. தொல்படிவங்கள் என்றால் என்ன?

புதைபடிவங்கள். புவி ஓட்டின் படிவப்பாறைகளில் இவை பாதுகாக்கப்படுகின்றன.

74. தொல்படிவ எரிபொருள்கள் யாவை?

நிலக்கரி, எண்ணெய்.

75. மாசாதல் என்றால் என்ன?

மனிதச் செயல்களால் இயற்கைச் சூழலின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றம்.

76. மாசாதலைத் தடுப்பது எப்படி?

1. தொழிற்சாலைச் சட்டங்கள்.
2. புகையிலா எரிபொருள்களை உண்டாக்கல்.
3. சில தொற்றுநோய்க்கொல்லிகளைத் தடை செய்தல்.

77. அதிகம் மாசடையும் இரு பொருள்கள் யாவை?

காற்று, நீர்.

78. காற்று மாசடைவதால் ஏற்படும் பேராபத்து என்ன?

மழை பெய்வதை அது தடுக்கும்.