பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94



கொள்கை. இயற்கைத் தேர்வுக் கருத்துகளையும் சேர்ப்பது.

15. குவி உயிர்மலர்ச்சி என்றால் என்ன?

ஒத்த சூழ்நிலைகளில் வாழ்வதால், உறவிலா உயிர்களுக்கிடையே ஒத்த உறுப்புகள் உண்டாதல். எ-டு. பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றின் சிறகுகள்.

16. உயிர்த்தோற்றம் என்றால் என்ன?

இது ஒரு திண்ணிய அறிவியல் கொள்கை. உயிர்ப் பொருள்களிலிருந்தே உயிரிகள் உண்டாக இயலும் என்பது இதில் வற்புறுத்தப்படுகிறது.

17. மரபணுவியல் என்றால் என்ன?

உயிரின் மரபுவழி, வளர்ச்சி, வேறுபாடு, மலர்ச்சி ஆகியவை பற்றி ஆராயுந்துறை.

18. மரபணுவியலின் தந்தை யார்?

ஜான் கிரிகார் மெண்டல்.

19. உயிரித்தொகை மரபியல் என்றால் என்ன?

ஒரே சிறப்பினத்தைச் சார்ந்த உயிரிகள் தொகுதியில் ஏற்படும் மரபுரிமை மாறுபாட்டின் பரவலை ஆராயுந்துறை. இதில் உயிரியலார் ஆல்டேன் வல்லுநர்.

20. மரபுவழி என்றால் என்ன?

பெற்றோரிடமிருந்து பெறும் மரபுக் கொடையின் தொகை.

21. கண்ணறை மரபணுவியல் என்றால் என்ன?

மரபுவழித்திறனோடு நிறப்புரியின் அமைப்பையும் நடத்தையையும் தொடர்புபடுத்துவதை ஆராயுந்துறை.

22. மெண்டல் கொள்கை கவனிப்பாரற்று எத்தனை ஆண்டுகள் கிடந்தது?

1865லிருந்து 1900 வரை கவனிப்பாரற்றுக் கிடந்தது.

23. தம் பட்டாணிச் செடி ஆராய்ச்சியை மெண்டல் எத்தனை ஆண்டுகள் செய்தார்?

8 ஆண்டுகள் செய்தார் (1857-1864)

24. மெண்டல் கொள்கை என்பது யாது?

கால்வழி பற்றி ஜோகன் கிரிகார் மெண்டல் (1822-1884)