பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95


முன்மொழிந்திட்ட விதிகள் கொண்டது. அவை பிரிதல் விதியும் ஒதுக்கல் விதியும் ஆகும்.

25. மெண்டல் விதிகளைக் கூறுக.

1. பிரிதல் வீதி: எப்பண்பும் இரு காரணிகளாகவே உள்ளது. இக்காரணிகள் இரண்டும் உடல் கண்ணறைகளில் உள்ளன. ஆனால், அவற்றில் ஒன்று மட்டுமே ஏதாவது ஒரு பாலணுவுக்குச் செல்வது.

2. ஒதுக்கல் விதி: இக்காரணிகளின் பரவல் வரம்பிலா முறையில் உள்ளது. காரணி இணைகள் பலவற்றைக் கருதும்பொழுது, ஒவ்வொரு இணையும் தனித்துப் பிரிவது அல்லது ஒதுங்குவது. மெண்டலின் பண்புகள் தற்காலத்தில் மரபணுக்கள் என்று பெயர் பெறுபவை.

26. உட்கரு என்றால் என்ன?

உயிரணுவில் முன் கணியத்திலுள்ள வட்டப்பொருள். உயிரணுவின் செயல்களைக் கட்டுப்படுத்துவது.

27. இதிலுள்ள முக்கியப் பகுதிகள் யாவை?

நுண்கரு, நிறப்புரிகள், மரபணுக்கள், டிஎன்ஏ, ஆர்என்ஏ.

28. உட்கரு காடிகள் என்பவை யாவை?

எல்லா உயிரணுக்களிலும் உள்ளவை. கரிம அமிலங்கள்.

29. இவற்றின் இருவகைகள் யாவை?

1. டி ஆக்சி ரிபோஸ் உட்கரு காடி DNA.

2. ரிபோஸ் உட்கரு காடி RNA.

30. டிஎன்ஏவின் வேலைகள் யாவை?

1. புரதத்தொகுப்பு. 2. மரபுவழிப் பண்புகளைக் கொண்டு செல்லுதல். இது தலைமைக் கொத்தனார்.

31. ஆர்என்ஏவின் வேலைகள் யாவை?

டிஎன்ஏ வேலைகளுக்கு உதவுதல். இது துணைக்கொத்தனார்.

32. உட்கருப் புரதம் என்றால் என்ன?

இது ஓர் அரிய கூட்டுப்பொருள். உட்கரு புரதத்தைக்கொண்டது. எ-டு. நிறப்புரிகள்; ரிபோசோம்கள்.

33. உட்கரு காடிப்புரதப் பொருள்களை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?