பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99



1982இல் சர் ஏரன் கிளக் நோபல் பரிசுபெற்றார்.

34. இயக்குமரபணு என்றால் என்ன?

தன்னுடன் அமைப்பு நெருக்கமுள்ள மரபணுக்களின் தொகுப்புச் செயலைக் கட்டுப்படுத்துவது.

35. பிளவு மரபணுக்கள் என்றால் என்ன?

இவற்றை அமெரிக்க ஆராய்ச்சியாளர் டாக்டர் பிலிப்ஷார்ப் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் டாக்டர் ரிச்சாடு இராபர்ட் ஆகிய இருவரும் 1977இல் தனித்தனியே கண்டுபிடித்தனர். இக்கண்டுபிடிப்பிற்காக 1993க்குரிய உடலியல் மருத்துவத்துறை நோபல் பரிசு இவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

36. இவர்கள் ஆராய்ச்சி முடிவுகள் யாவை?

இவர்கள் முடிவுப்படி டிஎன்ஏ என்பது தனித்தனி மரபணுக்களாலானது. இவை புறவியன்கள் (எக்சான்கள்) உள்ளியன்கள் (இண்டரான்கள்) என இருவகை.

37. புறவியள்களின் வேலை என்ன?

புரதத்தை உருவாக்குவது.

38. உள்ளியன்களின் வேலை என்ன?

இவை புறவியன்களை முறிப்பவை. புரதச் செய்தியைக் கொள்வதில்லை. இவற்றிற்குத் தூண்டு டிஎன்ஏ என்று பெயர்.

39. மரபுத்தகவு என்றால் என்ன?

ஒரு மரபணுவின் புறமுத்திரை வெளிப்பாட்டளவு. பல மரபணுக்கள் 100% தகவுடையவை. இம்மதிப்பு சூழ் நிலையால் பாதிக்கப்படும்.

40. வெளிப்பெருக்கம் என்றால் என்ன? மரபணுவழியில் வேறுபட்டதும் சார்புவழியில் தொடர்பு இல்லாததுமான தனி உயிர்களுக்கிடையே கலப்பு நிகழ்தல்.

41. புறமுத்திரை என்றால் என்ன?

சூழ்நிலையில் குறிப்பிட்ட மரபு முத்திரையின் வினையால் உண்டாகும் உயிரி.

42. மரபு முத்திரை என்றால் என்ன?