99 14. கடல் ஆராய்ச்சி கடலை ஆராய மேற்கொள்ளப்பட்ட மூன்று அனைத் துலகத் திட்டங்கள் யாவை? 1. ஐஜிஒய் அனைத்துலக இயற்பியல் ஆண்டு. 2. ஐஐஒஇ அனைத்துலக இந்தியக் கடல் பயணம். 3. கூஸ் - உலகக் கடல் உற்றுநோக்கு அமைப்பு. கடற்கரை மேலாண்மை என்றால் என்ன? இதன் முழுப் பெயர் ஒருங்கிணைந்த கடல் மண்டல மேலாண்மை என்பது. இதன் திட்டங்கள் மூன்று இடங்களில் செயற்படுகின்றன. அவற்றில் ஒன்று சென்னை. இதன் முதன்மையான நோக்கம் கடற் பகுதிகளைக் காப்பதும் பொருளியல் செயல்களை ஊக்குவிப்பதும் ஆகும். மைய அரசு சார்ந்தது. கடல்துறையில் இந்தியாவின் அருஞ்செயல்கள் யாவை? 1. கடல் வளர்ச்சித் துறை நிறுவியுள்ளது. 2. கடற்கரை மேலாண்மை அமைத்துள்ளது. 3. தேசியக் கடல் தகவல் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. 4. அரசு இடைக் கடல் வரைவியல் ஆணையத்திற்குத் தன் ஒத்துழைப்பை வழங்குவது. 5. கடல் உற்றுநோக்கு அமைப்புகளை உருவாக்கியுள்ளது. 6. தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக் கியுள்ளது. 7. கடல்விதி மற்றும் அண்டார்க்டிக் உடன்படிக்கை அமைப்பிலும் பணி செய்தல். 8.கடலை ஆராயும் ஓவுன்சட் என்னும் செயற்கை நிலாவை 1996 மே 2 0இல் ஏவியது. 9. இந்தியக் கடல் ஆய்வுத் திட்டத்தைச் செயற் படுத்துகிறது. இந்தியக் கடல் ஆய்வுத்திட்டம் என்றால் என்ன? இது அமெரிக்கத் தேசிய அறிவியல் நிறுவனத்தின் ஆதரவில் நடைபெறும் திட்டம். இத்திட்டத்தின் நோக்கமென்ன?
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/101
Appearance