பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 100 1. காற்றில் சேர்ந்துள்ள மாசுகள் புவியைக் குளிர் விப்பதை ஆராய்வது. 2. உலகம் வெப்பம் அடைதலால் ஏற்படும் தீய விளை வுகளை நீக்குதல். இது எப்பொழுது தொடங்கியது? செலவு என்ன? 1999இல் தொடங்கியது. செலவு 25 மில்லியன் டாலர். அமெரிக்க அறிவியலாரும் இந்திய அறிவியலாரும் கலந்து கொள்கின்றனர். இந்தியத் தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நோக்கம் என்ன? - கடலின் அனைத்து வளங்களையும் காணும் தொழில் நுட்பங்களை உருவாக்கல். மண்டல ஆராய்ச்சி நிலையம் யாரால் எப்பொழுது நிறுவப் பட்டது? 1947இல் மைய அரசால் இராமேஸ்வரத்தில் மண்டபம் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது. இதன் பணிகள் யாவை? இது கடல் துறை மைய மீன் ஆராய்ச்சி நிலையம். இதற்கு இந்தியா முழுதும் கிளைகள் உள்ளன. இந் நிலையம் கடல் மீன்களைப் பற்றி ஆராய்ச்சி நடத்திய வண்ணம் உள்ளது. கடல்துறை சார்பாக ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் பணிகள் யாவை? - 1952இல் இப்பல்கலைக்கழகம் பல கடல் பயணங் களுக்கு ஏற்பாடு செய்தது. இதற்கு இந்தியக் கடற்படை உதவிற்று. பயணங்கள் வங்காளவிரிகுடாவில் மேற் கொள்ளப்பட்டன. அவற்றால் கிடைத்த முடிவுகளில் சிலவற்றை 1954-1958இல் இரு கடல் தொகுதிகளில் வெளியிட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கடல்துறைப் பணி யாது? கடல் உயிர் ஆராய்ச்சி நிலையம் பறங்கிப்பேட்டையில் உள்ளது. இது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு தொடர்புள்ளது.