106 1. தூந்திரமண் - கரிமப் பொருள் உள்ளது. தூந்திரத் தாவரமுள்ள இடத்தில் உள்ளது. 2. பாட்சால் மண் - கரிமப் பொருள் உள்ளது. ஊசி இலைக் காடுகளில் உள்ளது. 3. சாம்பல் - பழுப்பு மண் - கரிமப் பொருள் உண்டு. இலையுதிர் காடுகளிலும் ஊசியிலைக் காடுகளிலும் காணப்படுவது. - 4. மஞ்சள் - சிவப்பு மண் - கரிமப் பொருள் உண்டு. இலையுதிர் காடுகளிலும் ஊசியிலைக் காடுகளிலும் காணப்படுவது. 5. புல்வெளிமண் -புல்வெளிப் பகுதியில் காணப்படுவது. 6. பாலைமண் - கரிமப் பொருள் குறைவு. பாலைநிலப் பகுதியில் உள்ளது. கரிசல் மண்ணின் இயல்புகள் யாவை? 1. கருப்பு நிறம் 2. ஈரப்பதத்தைத் தேக்கி வைக்கும். 3. தக்காணலாவாப் பீடபூமியில் இம்மண் காணப்படுகிறது. 4. பருத்தி விளைவதற்கேற்றது. வண்டல் மண்ணின் இயல்புகள் யாவை? 1. ஆறுகள் அடித்து வரும் நுண்ணிய துகள்களால் ஏற்படுகிறது. 2. வேளாண்மைக்கு மிகச் சிறந்தது. 3. காவிரி டெல்டா பகுதி சிறந்த எடுத்துக்காட்டு. செம்மண்ணின் இயல்புகள் யாவை? 1. பாறைகள் சிதைவதால் உண்டாவது. 2. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் முதலிய மாநிலங் களில் இது காணப்படுகிறது. பாலை மண்ணின் இயல்புகள் யாவை? 1. ஈரம் தாங்கும் ஆற்றல் இல்லை. 2. பாலைவனத்தில் காணப்படுவது. 3. தாவர வளர்ச்சி மிகக் குறைவாக இம்மண்ணில் நடை பெறும். சரளை மண்ணின் இயல்புகள் யாவை?
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/108
Appearance