பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் வினா விடை புவிஅறிவியல் 1. புவி இயல் புவி அறிவியல்கள் என்பவை யாவை? புவியின் மேற்பரப்பை ஆராயும் அறிவியல் துறைகள். இவற்றில் புவிஇயல், புவி அமைப்பியல், புவி இயற்பியல், புவி வேதியியல் முதலியவை அடங்கும். புவி இயலுக்குப் பழைய பெயர்கள் என்ன? இயற்கை வரலாறு, இயற்கை மெய்யறிவியல். பண்டைய புவிஇயலார் இருவர் யார்? தேல்ஸ் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு. ஹெரோடோடஸ் கி.மு. 5ஆம் நூற்றாண்டு. இருவரும் கிரேக்க அறிஞர்கள். கி.பி. முதல் நூற்றாண்டில் 17 தொகுதியுள்ள புவி இயல் நூல் எழுதியவர் யார்? ஸ்ட்ரோபோ. இதில் இவர் தாம் நேரில் பார்த்தவற்றைக் குறித்துள்ளார். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க புவி இயற்பியலார் யார்? தாலமி. தாலமியின் அரும்பணி யாது? இவரே புவி இயலை முறைப்படுத்தியவர். இவர் தம் புவி இயல் வழிகாட்டி என்னும் நூல் 8 தொகுதிகளைக் கொண்டது. புவி இயல் வரலாற்றில் கண்டுபிடிப்புக் காலம் என்று கூறப்படுவது எது? ஏன்? 15 ஆம் நூற்றாண்டு. இந்நூற்றாண்டில் பார்ட்டோலோமு டயஸ், வாஸ்கோடகாமா, கொலம்பஸ் ஆகிய மூவரும் தங்கள் பயணங்களின் மூலம் உலகை விரிவாக்கினர்.