பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. 17, 18. 19. 20. 21. 22. 25. 24. 108 மையத்தரைக் காடுகள் எங்குள்ளன? மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ். இவை அடர்ந்த காடுகள். பசுமை மாறாதவை. இக்காடுகளல் பல்வகை மரங்கள், பனை வகைகள், பெரணி வகைகள், செடிகொடிகள் முதலியவை வளர்கின்றன. தூந்திரப்பிரதேசம் எங்குள்ளது? ஆசியாவில் வடஎல்லையில் ஆர்க்டிக்கடலை ஒட்டிய நீண்ட நிலப்பரப்பு. இங்கு வளரும் தாவரங்கள் யாவை? புல், புதர், பூப்பாசிகள், பலவகைப் பூக்கள். ஊசியிலைக் காடுகள் எங்குள்ளன? சைபீரியத் தாழ்நிலங்கள், மையச் சைபீரியப் பீடபூமி, காம்சட்கா தீபகற்பம். இக்காடுகளில் பசுமை மாறாப் பிர், சிடார், லார்ச், பைன், ஸ்புரூஸ் முதலிய மரங்கள் வளர்கின்றன. ஸ்டெப்பி புல்வெளி எங்குள்ளது? யுக்ரேன் பகுதி, மையச் சைபீரியா. இங்குக் காணப்படும் முக்கியப் புல்வகை கிராமினி. ஆசியாவில் பாலைவனங்கள் எங்குள்ளன? தென்மேற்கு ஆசியா முதல் மங்கோலியா வரை. எ-டு. அரேபியா பாலை, தார்பாலை. இங்குக் கள்ளி, கற்றாழை, முட்புதர்கள் முதலியவை வளர்கின்றன. மையத் தரைக்கடல் தாவரப் பகுதி எங்குள்ளது? ஆசியா மைனர் கடற்கரையோரப் பகுதி. இங்கு ஒக், மல்பரி, ஆலிவ், லாரல், அக்ருட் முதலிய தாவரங்கள் வளர்கின்றன. பாலைவனம் என்றால் என்ன? பெரிய வட்டாரச் சமுதாயம். குறைந்த மழையும் மிகக் குறைந்த தாவர வளமும் உள்ளது. உலகிலுள்ள பாலைவனங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை? மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. உள் வெப்ப மண்டலப் பாலைவனங்கள்