பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. 17. 18. 19. 20. 21. 22. 25. 24. 25. 26. 114 இவற்றில் மிக ஆழமானது எது? ஆழங் குறைந்தது எது? அதிக ஆழமுள்ளது பெய்கால், ஆழம் குறைந்தது அசிக் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது? ஏரி சுப்பீரியர். அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளிலும் 82,000 சதுர கி.மீ. பரப்பளவுக்குள்ளது. சீனாவில் மஞ்சள் ஏரி செய்யும் அழிவு வேலை யாது? ஒவ்வொராண்டும் 2000 மில்லியன் டன்கள் அளவுக்கு மண்ணைப் பள்ளதாக்கு நோக்கி அடித்துச் செல்கிறது. உலகிள்ள ஆழமான ஏரிகள் எத்தனை? பத்து. இவற்றில் மிக ஆழமான ஏரி எது? உருசியாவிலுள்ள பெய்கால் ஏரி. ஆழம் 1940 மீ. அனைத்துலகக் கடல் உலக கண்காட்சி எங்கு எப்பொழுது நடந்தது? 2001 பிப்ரவரி 10 இல் விசாகப்பட்டினத்தில் நடந்தது. பொங்குகிணறுகள் தமிழ்நாட்டில் எங்குள்ளன? நெய்வேலியில். பொங்குகிணறுகளின் பயன் யாது? இவை குடிப்பதற்கும் பாசனத்துக்குரிய நீரை அளிப்பவை. நீர் வீழ்ச்சிகள் எவ்வாறு உண்டாகின்றன? பாறையின் வழியாகச் செல்லும்பொழுது இவை தோன்றுகின்றன. மென்மையான பாறையை ஆறு அரிக்க வல்லது. இதனால் ஒரு படி உண்டாகிறது. இது படிப்படியாக ஆழமாவதால், அதில் ஆறு சென்று நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. எ-டு குற்றால அருவிகள், சிவ சமுத்திர அருவிகள். நீர்வீழ்ச்சியின் பயன்கள் யாவை? 1. குடிப்பதற்கும் பாசனத்திற்கும் நீர் அளிக்கின்றன. 2. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூலமாக உள்ளன. 3. கற்றுலா மையம். மூவகை நீர்ப்பாசன முறைகள் யாவை? 1. கால்வாய்ப் பாசனம்