உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. 46. 47. 48. 49. 50. 117 பக்ராநங்கல் பாசனத் திட்டம் என்றால் என்ன? அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களின் கூட்டுத் திட்டம். இந்தியாவின் மிகப் பெரிய பள்ளத்தாக்குத் திட்டம்; பன்னோக்கமுள்ளது. இதில் சாகர் அணைக்கட்டும், இரத்தின பிரதாப் சாகர் அணைக்கட்டும், ஜவகர் சாகர் அணைக்கட்டும் உள்ளன. தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் என்பது யாது? இது மேற்கு வங்கம், பீகார் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சி. ஒரு பன்னோக்குத் திட்டம். பாசனம், மின் உற்பத்தி, வெள்ளக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்காக அமைக்கப்பட்டது. இதில் பன்னோக்கு அணைக்கட்டுகள் உள்ள இடங்கள் ஆவன: திலையா, கோனா, மைய்தான், பஞ்சட் அனல் மின் நிலையங்கள் உள்ள இடங்களாவன: பொகாரா, சத்தபுரம், துர்காபூர். தாமோதர் பள்ளத் தாக்குக் கழகம் இதை மேலாண்மை செய்கிறது. பாராகா நீர்ப்பாசனத் திட்டம் என்றால் என்ன? இது மேற்கு வங்கத் திட்டம். கல்கத்தா துறைமுகத்தைப் பேணிப் பாதுகாக்கவும் ஹஅக்ளி ஆற்றின் போக்கு வரத்தை மேம்படுத்தவும் இது மேற்கொள்ளப் பட்டது. கங்கை திக்குக் குறுக்கே கொரம்பு ஒன்று கட்டப் பட்டுள்ளது. இதே போன்று கொரம்பு பாகிரதி ஆற்றுக் குக் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கங்கை ஆற்றிலிருந்து ஒரு நீர் வழங்கும் கால்வாய் கிளம்புகிறது. காண்டக் நீர்ப்பாசனத் திட்டம் என்றால் என்ன? இது பீகார், உத்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டுத் திட்டம். நேபாலும் தனக்கு வேண்டிய நீரையும் மின்னாற்றலையும் இதிலிருந்து பெறுகிறது. சத்தபிரபா நீர்ப்பாசனத் திட்டம் என்றால் என்ன? இது கர்நாடகத் திட்டம். பெல்கம், பீஜபூர் ஆகிய மாவட்டங்களில் சத்தபிரபா நதிக்குக் குறுக்கே அமைந்த திட்டம். ஹாஸ்டியே பங்கோ நீர்ப் பாசனத் திட்டம் என்றால் என்ன?