பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. 52. 118 இது மத்தியப் பிரதேசத் திட்டம். இரண்டு நிலைகள் முடிந்து மூன்றாம் நிலை தொடங்கியுள்ளது. ஹாஸ்டியோ ஆற்றுக்குக் குறுக்கே மூன்றாம் நிலையில் பொதுவான அணைக்கட்டு ஒன்று கட்டப்படும். பக்ராவில் சட்லஜ் நதிக்குக் குறுக்கே நேரான ஈர்ப்பு தாங்கு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. தவிர நங்கல் நீர்க் கால்வாய் உள்ளது. மேலும் பக்ரா அணைக்கட்டில் இரண்டு மின்நிலையங்களும் கங்குவால், கோட்லா ஆகிய இடங்களில் இரண்டு மின் நிலையங்களும் உள்ளன. பீமா நீர்ப்பாசனத் திட்டம் என்றால் என்ன? இது மகாராஷ்டிரத்தில் உள்ளது. இதில் இரு அணைக் கட்டுகள் உள்ளன. பவானி ஆறறில் ஒன்றும், கிருஷ்ணா ஆற்றில் ஒன்றும் இவை முறையே உள்ளன. சாம்பல் நீர்ப்பாசனத் திட்டம் என்றால் என்ன? இது மத்தியப் பிரதேசம் இராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டுத் திட்டம். இதில் காந்தி சாகர் அணைக்கட்டு, ரத்தினப்பிரபா சாகர் அணைக்கட்டு, ஜவஹர் அணைக்கட்டு ஆகியவை அடங்கும். 17. இந்தியா 1. அமைப்பு இந்தியா எங்கு அமைந்துள்ளது? நிலப் பகுதி மிகுந்த வடகோளப் பகுதியில் ஆசியா கண்டத்தின் தென் பகுதியில் இந்தியா அமைந்துள்ளது. இந்தியாவின் பரப்பளவு என்ன? 3.2 மில்லியன் சதுரக் கிலோமீட்டர். உலகிலுள்ள நாடுகளில் பரப்பளவில் இந்தியா ஏழாவது நாடு. சீனாவிற்கு அடுத்துள்ள பெரிய நாடு எது? இந்தியா இந்தியாவிலுள்ள சமயங்கள் யாவை?