பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 120 6. மேற்குக் கடற்கரைச் சமவெளி 7.தக்காணப் பீடபூமி இமயமலைப் பிரதேசத்தின் இருபிரிவுகள் யாவை? 1. மேற்கு இமய மலைப்பிரதேசம் 2. கிழக்கு இமயமலைப் பிரதேசம் மேற்கு இமயமலைப்பிரதேசத்தில் உள்ள மாநிலங்கள் யாவை? காஷ்மீர், இமாசலப்பிரதேசம், உத்திரப்பிரதேசத்தின் வடக்குப் பகுதி. கிழக்கு இமயமலைப் பிரதேசத்தில் உள்ள மாநிலங்கள் யாவை? அருணாசலப் பிரதேசம், மேற்கு வங்காளம். சிந்து வடிநிலத்திலுள்ள மாநிலங்கள் யாவை? கிழக்கு பஞ்சாப், அரியானா. கங்கை வடிநிலத்தின் பிரிவுகள் யாவை? 1. மேல் கங்கைச் சமவெளி 2. மையக் கங்கைச் சமவெளி 3. கீழ்க்கங்கைச் சமவெளி மேல் கங்கைச் சமவெளியில் உள்ள மாநிலங்கள் யாவை? தில்லி, உபி (பெரும் பகுதி) மையக் கங்கைச் சமவெளியில் உள்ள மாநிலங்கள் யாவை? பீகார் (பெரும் பகுதி), சோட்டாநாகபுரி பீட பூமி ( சிறு பகுதி) உலகிலேயே மிகப்பெரிய டெல்டா எது? கங்கை டெல்டா. தக்காணப் பீடபூமி என்றால் என்ன? தீபகற்ப இந்தியா ஒரு பீடபூமி. ஆரவல்லிக் குன்றுகள், விந்திய சாத்பூரா மலைகள் ஆகியவை இதை வட இந்தியச் சமவெளியிலிருந்து பிரிக்கின்றன. வடி பகுதி அகன்றும் தென் பகுதி குறுகியும் உள்ளது. இப்பீடபூமி இது கடினப் பாறைகளாலானது, மேற்கிலிருந்து கிழக் காகச் சரிந்துள்ளது.