பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


59. 60. 61. 62. 65. 64. 126 குடாவில் கலக்கிறது. தென்னிந்திய ஆறுகள் யாவை? நர்மதை, தபதி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வட பெண்ணை. தமிழ்நாட்டிலுள்ள ஆறுகள் யாவை? பாலாறு, தென் பெண்ணை, வைகை, தாமிரபரணி. நர்மதையின் சிறப்புகள் என்ன? 1. நீளம் 1,280 கி.மீ. 2. மைகால் மலைத் தொடரில் தோன்றுகிறது 3. விந்திய, சாத்பூரா மலைகளுக்கிடையில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலிலுள்ள காம்பே வளை குடாவில் கலக்கின்றது. தபதியின் சிறப்புகள் என்ன? 1. இதன் நீளம் 640 கி.மீ. 2. மகாதேவ் குன்றுகளில் தோன்றுவது. 3. சாத்பூ மலைகளுக்குத் தெற்கில் மேற்குநோக்கிப் பாய்ந்து காம்பே வளைகுடாவில் கலக்கின்றது. மகாநதியின் சிறப்புகள் என்ன? 1. இதன் நீளம் 880 கி.மீ. 2. மத்தியப் பிரதேசத்தில் உள்ள பஸ்தார் குன்றுகளில் தோன்றுவது. 3. ஒரிசா மாநிலத்தின் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. 4. இந்த ஆறு பாயும் சமவெளிக்கு சட்டிஸ்கர் சமவெளி என்று பெயர். - கோதாவரியின் சிறப்புகள் என்ன? 1. இதன் நீளம் 1450 கி.மீ. 2. தென்னிந்திய ஆறுகளில் இதுவே நீளமானது. 3. இது தக்காணப் பீடபூமியின் வடமேற்குப் பகுதியில் உள்ள நாசிக்கின் அருகில் திரியம்பக் என்னுமிடத்தில் தோன்றுகிறது. 4. இது தென்கிழக்காக ஒடி மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து வங்காளவிரி