பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. 66. 67. 68. 69. 70. 71. 127 குடாவில் கலக்கிறது. 5. இதன் முக்கியக் கிளையாறுகள் பென்கங்கா, பெயின்கங்கா, வார்தா, மஞ்சிரா, இந்திராவதி, சபரி. கிருஷ்ணாவின் சிறப்புகள் என்ன? 1. இதன் நீளம் 1,290 கி.மீ. 2. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் மகாபலேஸ் வரத்திற்கு அருகில் தோன்றுவது. 3. கிழக்காக மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 4. இதன் கிளையாறுகள் துங்கபத்திரா, பீமா, வேணி, கடட்பிரபா, மலப்பிரபா, தண்டி, மூசி. காவிரியின் சிறப்புகள் என்ன? 1. இதன் நீளம் 760 கி.மீ. 2. இது கர்நாடகத்தில் குடகு மலையில் மெர்க்காரவிற்கு அருகில் தலைக்காவிரி என்னுமிடத்தில் தோன்றுவது. 3. இது கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக ஒடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 4. இதன் முக்கியக் கிளையாறுகள் பவானி, நொய்யல், அமராவதி. வடபெண்ணை எங்குத் தோன்றி எங்கு ஒடுகிறது? மைசூர் பீடபூமியின் தோன்றி, ஆந்திர மாநிலத்தின் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வைகையாறு எங்குத் தோன்றுகிறது? ஏலக்காய் மலையில் தோன்றித் தமிழ்நாட்டின் வழியாகப் பாய்ந்து மன்னார் குடாவில் கலக்கின்றது. தாமிரபரணி எங்குத் தோன்றுகிறது? எங்கு முடிகிறது? மேற்குத் தொடர்ச்சி மலையில் அகத்திய மலையில் தோன்றி மன்னார் குடாவில் கலக்கிறது. தாமிரபரணியின் கிளையாறுகள் யாவை? மணிமுத்தாறு, சிற்றாறு. மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி அரபிக் கடலில் கலக்கும் சிறிய ஆறுகள் யாவை?