17. 18. 19. 20. 21. 22. 25. 24. 11 இயலுமைக் கொள்கை என்றால் என்ன? தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையைக் கொண்டு மனிதன் தன் வளர்ச்சியைத் தெரிவு செய்யக் கூடியவனாக உள்ளான். 1960களில் ஏற்பட்ட பெரிய மாற்றம் என்ன? முறையியலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. புள்ளி இயல் ஒர் ஆராய்ச்சி நுணுக்கமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. இப்புள்ளியியல் நுணுக்கத்திற்கு முன்னோடி யார்? ஸ்வீடனில் வாழ்ந்த டார்சன் ஹேகர்ஸ் ட்ரேண்ட், ஜெர்மனியில் வாழ்ந்த வால்டர் கிறிஸ்டாலர். 1920களிலும் 1930களிலும் இவர்கள் புள்ளியியல் முறையைப் பயன்படுத்தினர். புவியியலுக்குரிய இரு அணுகுமுறைகள் யாவை? 1. நடைமுறைப் புவி இயல் 2. வட்டாரப் புவி இயல் நடைமுறைப் புவி இயல் என்றால் என்ன? இதை முறைசார் புவி இயல் என்றும் கூறலாம். ஒர் அமைப்பை இடத் தொடர்பாக ஆராய்வது. இதில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் பரவலும் அடங்கும். இது மனிதனோடு தொடர்பு படுத்தப்படும். இதை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குக. மருத்துவப் புவி இயலை எடுத்துக் கொள்வோம். நோயை உண்டாக்கும் உயிரிகளின் பரவலையும் அந்நோய் அங்கு வாழும் மக்களோடு கொண்டுள்ள தொடர்பையும் இது ஆராய்வது. புவி இயல் என்றால் என்ன? புவி மேற்பரப்பு இயல்புகள் அவற்றின் பரவல் வினை ஆகியவை பற்றி ஆராயும் துறை. புவி இயலின் பிரிவுகள் யாவை? 1. இயற்கைப் புவி இயல் 2. வட்டாரப் புவி இயல் 3. மனிதப் புவி இயல்
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/13
Appearance