பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. 100. 101. 102. 103. 104. 105. 106. 151 2. பணப்பயிர்கள் உணவுப் பயிர்கள் வகைகள் யாவை? 1. தானியங்கள் - நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம். 2. பருப்புகள் - துவரை, உளுந்து பயறு முதலியவை 3. நறுமணப் பொருள்கள் - மிளகு, ஏலக்காய், மஞ்சள், இஞ்சி. பணப்பயிர்கள் யாவை? 1. எண்ணெய் வித்துகள் - எள், நிலக்கடலை, தேங்காய் முதலியவை. - 2. இழைப் பயிர்கள் - பருத்தி, சணல் 3. தோட்டப் பயிர்கள் - தேயிலை, காப்பி, ரப்பர் 4. ஏனைய பயிர்கள் - கரும்பு, புகையிலை. மீன்களின் உணவுச் சிறப்பென்ன? சிறந்த புரதம் உள்ளவை. மீன் பிடிப்பின் வகைகள் யாவை? 1. ஆழ்கடல் மீன் பிடிப்பு 2. கடலோர மீன் பிடிப்பு 3. உள்நாட்டு மீன் பிடிப்பு. ஆழ்கடல் மீன்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது? கொங்கணக் கடற்கரை, கேரளக் கடற்கரை, சோழ மண்டலக் கடற்கரை. கடலோர மீன் பிடிப்பு எவ்வாறு நடைபெறுகிறது? கட்டுமரங்கள் மூலமும் விசைப்படகுகள் மூலமும் மீனவர்களால் நடைபெறுவது. உள்நாட்டு மீன் பிடிப்பு என்பதென்ன? ஆறுகள், வாய்க்கால், ஏரி முதலியவற்றில் மீன் பிடித்தல். இந்தியாவில் மீன் பிடிக்கும் தொழில் கணிசமாக வளராத தற்குக் காரணங்கள் என்ன? 1. மீன் பிடிக்கும் தொழிலில் நவீன முறையில் கையாளப் படுவதில்லை. 2. குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பெரிய கப்பல்கள் போதிய அளவு இல்லை.