பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114. 115. 116. 117. 118. 133 வடகிழக்குப் பருவக்காலத்தின் நன்மை தீமைகள் யாவை? 1. இப்பொழுது வங்காள விரிகுடாவில் காற்றின் அழுத்தம் குறைந்து சூறாவளிகள் தோன்றும். இவை இந்தியாவின் கிழக்குக் கடற்கரையிலுள்ள தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களின் கடற்கரைப் பகுதிக்கு அதிக மழையைக் கொடுக்கின்றன. 2. இவை உயிருக்கும், உடமைக்கும் சேதத்தையும் விளை விப்பவை. இந்தியாவின் மிக வெப்பமான மாதம் எது? மே மாதம். இந்தியாவின் கோடை வெப்பம் தென்னிந்தியாவின் கோடைவெப்பத்தை விட அதிகம் ஏன்? 1. வட இந்தியா பெரிய நிலப்பரப்பான ஆசியக் கண்டத் துடன் இணைந்துள்ளது. 2. கடற்கரையிலிருந்து வெகுதொலையில் உள்ளது. பம்பாயைவிட நாகபுரி அதிக வெப்பமாக உள்ளது. ஏன்? நாகபுரி உள்நாட்டிலும், பம்பாய் கடற்கரையிலும் உளளன. இந்தியாவின் குறிப்பிடத்தக்க மழைப் பிரதேசங்கள் யாவை? 1. கனத்த மழை பெறும் பகுதி: 200 செ.மீ.க்கு மேல் மழை. இதில் மேற்குக் கடற்கரைப்பிரதேசம், வங்காளம், அஸ்ஸாம், கிழக்கு இமயமலை பகுதி ஆகியவை 2. அதிக மழை பெறும் பகுதி. 100 - 200 செ. மீ. மழை. கங்கைச் சமவெளி, வங்காளம், பீகார், ஒரிசா, சோட்டா நாகபுரி ஆகியவை மழை பெறுகின்றன. 3. மித மழைப் பகுதி: 50 -100 செ.மீ மழை. தக்கான தெற்கு, தென்மேற்குப் பாகங்கள், மைய இந்தியப் பீட பூமி, உத்திரப் பிரதேசம், பீகார், மேற்குப்பகுதி ஆகியவை மழை பெறுதல். 4. குறைந்த மழைப் பகுதி: ஆண்டிற்கு 50 செ.மீ. க்கு குறைவான மழை, பஞ்சாப், இராஜஸ்தான். 5. குளிர்கால மழைப்பகுதி: 50 செ.மீ. 100 செ.மீ.வரை