பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


25. 26. 27. 28. 29. 50. 12– இயற்கைப் புவிஇயல் என்றால் என்ன? புவியிலுள்ள இயற்கை நிலைமைகள், முறைகள் ஆகியவற்றை ஆராய்வது. இவை இடத்தொடர்பான மலை, தீவு முதலியவற்றை உருவாக்குபவை. இயற்புவி இயலிலுள்ள பிரிவுகள் யாவை? 1. புவி உருவியல் - நிலத்தோற்றங்களை ஆராய்வது. இது புவியமைப்பியலுக்கும் புவி இயலுக்கும் இடையே ஒரு பாலமாக அமைவது. 2. உயிர்ப்புவிஇயல் - இதற்கு வேறுபெயர் பொருளியல் புவி இயல். உயிர்ப்பொருள்களை ஆராய்வது. 3. காலநிலை இயல்-வானக் கோலங்களை ஆராய்வது. வட்டாரப்புவி இயல் என்றால் என்ன? சார்பாக உள்ள ஒரு சிறிய பகுதியின் எல்லா நிலைகளையும் இது ஆராய்வது. இப்பகுதியை ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுவது. 100 மிமி க்குக் குறைவாக மழை பெறுமிடத்தை வட்டாரம் என்கிறோம். அல்லது அவ்விடத்தில் வாழும் மக்கள் வயது 15 க்குக் கீழிருக்கும். மனிதப் புவிஇயல் என்றால் என்ன? மக்கள் இடத்தொடர்பாக எவ்வாறு பரவியுள்ளனர், அவர்கள் தொழில்கள் என்ன என்பதை ஆராய்வது. இதிலுள்ள பிரிவுகள் யாவை? 1. பண்பாட்டுப்புவி இயல் - பண்பாட்டுக் குழுக்களை ஆராய்வது. 2. மக்கள் தொகைப் புவி இயல் - மக்கள் பரவலை ஆராய்வது. 3. பொருளியல் புவி இயல் - பொருளியல் செயல்களை ஆராய்வது. விளை பொருள்கள். 4. வரலாற்றுப் புவி இயல் - மனித இனத்தின் வட்டாரச் சூழ்நிலையை ஆராய்வது. 5. அரசியல் புவி இயல் - அரசு வகைகளை ஆராய்வது. 6. நகரப் புவி இயல் - நகரங்களை ஆராய்வது. புவியின் மீது உள்ள இயற்கையாலும் மனிதனாலும் உரு வாக்கப்பட்ட தோற்றங்கள் எவ்வாறு காட்டப்படுகின்றன?