18. 19, 20. 21. 153 முடிவுகள் தொகுக்கப்பட்டன. வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்பட்டன. 4. இந்தியக் கடலுக்கு அருகிலுள்ள நாடுகள் கடல் அலை களின் எழுச்சி வீழ்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களையும், காற்று மேல் வெளியில் உருவாகும் வானிலை மாற்றங் களையும் உற்றுநோக்கி ஆராய உதவின. ஆராயப்பட்ட துறைகள் யாவை? நில அமைப்பு நூல், நில இயல்நூல், கடல்நூல், வானிலை நூல், நீரியல், உயிரியல். ஆராயப்பட்ட பொருள்கள் யாவை? மழைப்பொழிவு, கதிர்வீச்சு, ஈர்ப்பு, நிலநடுக்கம், வெப்ப ஒட்டம், காற்று மேல்வெளி, படிவுகள், காந்த மாற்றம், கனிவளம். இதில் கலந்து கொண்ட நாடுகள் யாவை? ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், டென்மார்க், பார்மோசா, பிரான்சு, இந்தோனேஷியா, இஸ்ரேல், ஜப்பான், ஹாலந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஜெர்மனி. இத்திட்டத்தின் சிறப்புகள் யாவை? 1. உலக அளவில் பல நாடுகளின் கூட்டு முயற்சியினால் நடைபெற்ற மாபெரும் திட்டம். 2. அனைத்துலக நில இயற்பியல் ஆண்டுத் திட்டத்தை முன் மாதிரியாகச் கொண்டு செயற்படுத்தப்பட்டது. 3. முதன் முதலாக இந்தியக் கடல் நிறைவாக அறிவியல் அடிப்படையில் ஆராயப்பட்டது. 4. இத்திட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட துறையை, சிக்கலை ஆராய்ந்தது முடிவு களைக் கூறிற்று. சிறப்பாக, வானிலையை ஆராய்ந்தது. 5. இத்திட்டத்திற்கு ஆன செலவு ரூ 6 கோடி. இதில் பாதியை அமெரிக்கா ஏற்றது. எஞ்சிய பாதியைப் பிற நாடுகள் பகிர்ந்து கொண்டன. 6 திட்டகாலத்தில் 1,88,000 மைல் தொலைவிற்கு 60 கப்பல் பயனங்கள் மேற்கொள்ளப்பட்டன. 20 நாடுகளிலிருந்து 40 கப்பல்கள் இப்பயணங்களை மேற்கொண்டன. 나·11.
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/155
Appearance