14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
25.
24.
25.
18
புவியில் தோண்டப்பட்ட துளையின் அதிக ஆழம் எவ்வளவு? 12 கி. மீ. - புவிக்குக் காந்த ஆற்றல் உண்டா? உண்டு. புவி ஒரு பெரிய காந்தம். இதை நாம் எவ்வாறு அறியலாம்? காந்த ஊசி வடக்கு தெற்கு நோக்கியே நிற்கும். தற்பொழுது உள்ளது போலவே புவி இருந்ததா? இல்லை. கடின வெளிப்புற அடுக்கு பெரிய துண்டுகளாக உடைந்தன. இவை தட்டுகள் எனப்படும். இவை பல மில்லியன் ஆண்டுகளாக மிக மெதுவாக நகர்ந்து கொண்டுள்ளன. கண்டங்களையும் நகருமாறு செய்துள்ளன.
புவியின் உள்ளே இருப்பது என்ன? புவியில் 4 அடுக்குகள் உள்ளன. வெளிப்புற அடுக்கு தோடு. இதற்கு அடுத்துள்ளது மூடகம். இது தன் உச்சியில் கெட்டியாகவும் அடியில் பாறைகள் உருகக் கூடிய அளவுக்கு வெப்பமாகவும் உள்ளது.அடுத்துள்ளது வெளி உள்ளகம். இது வெப்ப நீர்ம உலோகத்தாலானது. மையத்திலுள்ளது அக உள்ளகம். இது கெட்டி உலோகத்தாலானது.
புவியின் எடை என்ன? 6,000,000,000,000,000,000,000 டன்கள். புவியின் அக உள்ளகத்தின் வெப்பநிலை என்ன? 5700 செ.
கற்கோளத்தில் அடங்குபவை யாவை? பாறைகள், கற்கள், மண். நீர்க்கோளத்தில் அடங்குபவை யாவை? நீர்ப்பரப்பு அனைத்தும் நீர்க்கோளத்தில் அடங்கும். புவி பெற்றிருக்கும் பண்புகள் யாவை? வடிவம், அளவு, பரப்பு.
புவி ஒட்டின் மிக உயரமான இடம் எது?
இமயமலை.
புவி ஒட்டின் மிக ஆழமான இடம் எது?
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/20
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
