பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. 11. 12. 15. 21 புவியமைப்பியலார் யார்? ஜேம்ஸ் ஹட்டன். இவர் ஒரு நெறிமுறையை வகுத்தார். இதற்காக இவர் புவி அமைப்பியலை நிறுவியவர் என்று போற்றப்படுகிறார். இந்நெறிமுறை மெய்ம்மைக் கொள்கையாகும். இதன்படி புவி மேற்பரப்பு அரிப்பினாலும் எரிமலைகளாலும் உண்டானது. இந்நெறிமுறையே தற்காலப் புவி அமைப்பியலின் பல அடிப்படைக்குக் காரணமாகும். இவர் கொள்கை பாறை வழிக் கொள்கையாகும். (plutonism) இவரும் புவி அறிவியலை ஒர் அறிவியலாகக் கருதினார். இவர் செய்த அரும்பணி யாது? 1795 இல் தம் கொள்கையை விளக்கப் புவிக் கொள்கை என்னும் நூலை இரு தொகுதிகளில் எழுதினார். இவர் ஸ்ட்காட் புவியமைப்பியலார். (1726-1797) ஜான் பிளேயியர் செய்த அரும் பணி யாது? இவர் ஹட்டன் கொள்கையைப் பின்பற்றியவர். ஆகவே, ஹட்டன் கொள்கை விளக்கங்கள் என்னும் நூலைத் துல்லியமாக எழுதினார். ஹட்டன் கொள்கையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகள் யாவை? புவியில் ஏற்பட்ட அமைப்பு மாற்றங்கள் சீரானவையும் சுழற்சியுள்ளவையும் ஆகும். இவை நீண்டகால எல்லையில் ஏற்பட்டவை. இவை அடிப்படையில் உண்மையானவை. ஹட்டன் கொள்கையில் ஏற்கத்தகாத கருத்துகள் யாவை? இம்மாற்றங்கள் ஏற்பட்டதற்குரிய நுட்பத்தை விளக்குவது ஏற்றுக் கொள்வதாக இல்லை. புவியமைப்பியலில் முறையான ஆராய்ச்சியைத் தொடங்கியவர் யார்? 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பஃபன் ஆவார். இவர் புவியமைப்பியலை விரிவாக ஆராய்ந்தவர். 44 தொகுதிகள் கொண்ட இயற்கை வரலாறு என்னும் நூல் எழுதியவர். அதில் இவர் புவியின் பொது வரலாறும்