பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. 27. 28. 29. 33 நூலை 1600இல் வெளியிட்டார். இதில் அவர் தம் ஆய்வு முடிவுகளை விளக்குகிறார். இம்முடிவுகளின் படி புவி ஒரு பெரிய காந்தமாகும். கதிரவன் முனைப்பு அல்லது முகடு என்றால் என்ன? பகலவனின் மேல் நிறவெளியில் தற்காலிகமாகத் தோன் றும் வளி முகில். சுற்றுப்புறத்தைக் காட்டிலும் குறைந்த வெப்பநிலையும் அதிக அடர்த்தியும் கொண்டது. ஒளிர் வான நாக்கு போன்ற நீட்சியாக உற்று நோக்கப்படுவது. கதிரவன் காற்று என்றால் என்ன? கதிரவன் முடிவட்டத்திலிருந்து கோளிடை வெளிக்குச் செல்லும் மின்னேற்றத் துகள்களின் தொடர்ந்த புற ஒட்டம். துகள்கள் பெரும்பாலும் முன்னணுக்களாலும் மின்னணுக்களாலும் ஆனவை. கதிரவன்காந்தப்புலத்தால் துகள்கள் கட்டுப்படுத்தப்படுபவை. கதிரவன் மண்டலம் என்றால் என்ன? கதிரவன் ஒரு விண்மீன். இதுவும் இதனைச் சார்ந்த 9 கோள்களும் அடங்கிய தொகுதியே இம் மண்டலம். கதிரவன் மண்டலத் தோற்றக் கொள்கைகள் யாவை? 1. புகைமக் கொள்கை - காண்ட் லேப்லாஸ் முதலியோ ரால் வெளியிடப்பட்டது. 2. ஒதக் கொள்கை - ஜூன், ஜெபர்கன் முதலியோரால் வெளியிடப்பட்டது. 6. காலம் உலகில் எத்தனை மண்டலங்கள் உள்ளன? 24 மண்டலங்கள் உள்ளன. நேரம் என்றால் என்ன? ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு நேரம் உண்டு. ஆகவே ஒரு மண்டலத்திற்கு மற்றொரு மண்டலத்திற்குச் செல்லும் பொழுது நம் கடிகாரத்தைத் திருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். H-3,