பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. 13. 14. S5 மாறுபடும். இந்திய உள்ளிட நேரமும் இங்கிலாந்து உள்ளிட நேரமும் ஒன்றாக இரா. திட்ட நேரம் என்றால் என்ன? ஒவ்வொரு நாடும் தன் நடுவே செல்லும் நெடுக்குக் கோட்டிலுள்ள ஓரிடத்தில் உள்ளுர் நேரத்தைத் கணக்கிட்டு, அதையே நாடு முழுவதும் பின்பற்றும். இதற்குத் திட்டநேரம் என்று பெயர். இந்தியாவைப் பொறுத்த வரை 82.5 நெடுக்குக் கோடு திட்ட நெடுக்குக் கோடு ஆகும். அங்குக் கணக்கிடப்படும் நேரமே திட்டநேரமாகும். இந்நேரம் நாட்டுக்கு நாடு வேறுபடும். கிரீன்விச்சு நேரம் என்றால் என்ன? முதன்மை நெடுக்கோட்டில் கணக்கிடப்படும் திட்ட நேரம். இதன் சிறப்பு யாது? இதை அடிப்டையாகக் கொண்டு ஏனைய இடங்களில் நேர அளவு, அவ்வவ்விடங்களின் நெடுக்குக் கோட்டைக் கொண்டு கணக்கிடப்படும். காட்டாகக், கிரீன்விச்சு திட்ட நேரம் பகல் 12 மணி என்றால், 60" கிழக்கு நெடுக்குக் கோட்டில் மாலை 4 மணி இருக்கும். அவ்வாறெனில், 60 x நெடுக்கோட்டு வேறுபாடு. 4x60 = 240 நிமி. அல்லது 4 மணி. இடம் கிழக்குப் பாதிக் கோணத்தில் இருப்பதால், கிரீன்விச்சு நேரத்திற்கு முன்னோக்கி 4 மணியாக இருக்கும். இதே இடம் மேற்குப் பாதிக்கோணத்தில் இதே 60" நெடுக்குக்கோட்டில் இருந்தால், கிரீன்விச்சு நேரத்திற்கு 4 மணி பின் நோக்கி இருக்கும். காலை 8 மணியாக இருக்கும். கிழக்கே சென்றால் நேரம் குறையும் மேற்கே சென்றால் கூடும். நெடுக்குக்கோடு என்றால் என்ன? தீர்க்கக்கோடு. இக்கோடுகள் வட தென்முனைகளை இணைத்து வட்டமாகச் செல்பவை. நெடுக்குக்கோடுகள் சுற்றளவில் குறைவதில்லை. ஏன்?